பயணிகளை ஏற்றுவதில் போட்டி; வயலுக்குள் சீறிப் பாய்ந்த தனியார் பேருந்து - திருவாரூரில் 20 பயணிகள் காயம்
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு 2 தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு சென்றதில் 1 தனியார் பேருந்து நிலைத்தடுமாறி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பயணிகள் காயமடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் தனியார் பேருந்துகள் பயணிகளை ஏற்றுவதில் சக பேருந்துகளுடன் போட்டி போட்டுக் கொண்டு வேகமாகவும், பிற வாகனங்களை அச்சுறுத்தும் வகையிலும் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த இரண்டு தனியார் பேருந்துகள் சாலையில் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு ஊரிலும் பயணிகளை விரைந்து சென்று ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மிக வேகமாக வந்துள்ளன.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை; தனது கல்வியால் வீட்டிற்கே வெளிச்சம் கொடுத்த அரசுப்பள்ளி மாணவி
அப்பொழுது, திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியில் தென்குடி ஆர்ச் உள்ள இடத்தில் ஒரு தனியார் பேருந்து சாலையில் இருந்து நழுவி உருண்டு, பிரண்டு வயல்வெளியில் விழுந்தது. மற்றொரு தனியார் பேருந்து விரைவாக சென்று விட்டது.
நெல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை; விரைந்து செயல்பட்டு சிறுத்தையை பிடித்த வனத்துறை
இந்த நிலையில் வயல்வெளியில் விழுந்த தனியார் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சிறு சிறு காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், நன்னிலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.