தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
மெகா ஆடிஷன் மூலமாக மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் இன்ட்ரோ ரவுண்ட் ஒளிபரப்பாகியது. 12 போட்டியாளர்கள் கடந்த வாரம் பாடி முடித்த நிலையில் இந்த வாரம் மீது 12 போட்டியாளர்களின் போட்டிக்கான முதல் பெர்பாமன்ஸ் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் இந்த வாரம் சரிகமப மேடையில் நடந்த சுவாரஷ்யமான சம்பவங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது விழுப்புரத்தை சேர்ந்து ஆட்டோ டிரைவரான வீரபாண்டி பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற அறியாத வயசு, புரியாத மனசு என்ற பாடலை பாடி நடுவர்களை மிரள வைத்துள்ளார். வீரபாண்டி பாடலை கேட்ட ஸ்ரீனிவாஸ் எப்படி நீ இப்படி பாடுனா, அப்படியே நெஞ்சுல அடிக்குது என பாராட்டியுள்ளார். அதன் பிறகு வீரபாண்டியின் ஆட்டோ ஸ்டாண்டில் வேலை பார்க்கும் அத்தனை டிரைவர்களும் மேடைக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுக்க அவர்களின் நட்பை பார்த்து மொத்த அரங்கமும் கண் கலங்கியுள்ளது.
அடுத்து முகேஷ் சந்தன தென்றலே பாடலை பாடி அசர வைக்க கார்த்திக், விபி ஆகியோர் முகேஷ் உடன் சேர்ந்து பாடி சரிகமப மேடையை மேலும் அழகாக்கியுள்ளனர்.இன்னொரு போட்டியாளரான ஜெயபார்கவி பாடிய பாடலை கேட்டு இதுவரைக்கும் ரியாலிட்டி ஷோல இந்த பாடலை இப்படி யாரும் பாடினதே இல்லை என்று பாராட்டி தள்ளியுள்ளனர்.
நான்கு நடுவர்களும் தனித்தனியாக ஒரு ரியாலிட்டி ஷோ மூலமாக எப்படி பின்னணி பாடகர்கள் ஆனார்கள் என்பது பற்றி பேசி நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படி இன்னும் பல நெகிழ்ச்சியான தருணங்களுடன் இந்த வார சரிகமப நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது, எனவே உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியை காண தவறாதீர்கள்.