ஆசையை சொன்ன இலங்கை போட்டியாளர்.. கார்த்திக் தந்த சர்ப்ரைஸ்! இந்த வார சரிகமபவின் ஸ்பெஷல் மூமென்ட்ஸ்!

By manimegalai a  |  First Published May 11, 2024, 10:29 PM IST

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன இந்த சேனலில் தற்போது சரிகமப நிகழ்ச்சியின்  நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. 
 


கடந்த இரண்டு வாரங்களாக நடந்து முடிந்த மெகா ஆடிஷன் மூலமாக மொத்தம் 24 பேர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை கார்த்திக் நடுவராக பங்கேற்காத நிலையில் இந்த சீசனில் அவர் மீண்டும் காம்பேக் கொடுத்துள்ளார். 

முதல் இரண்டு வாரங்களுக்கு அறிமுக சுற்று நடைபெற இருப்பதாகவும் முதல் வாரத்தில் 12 போட்டியாளர்கள் பாட அடுத்த வாரம் மீதமுள்ள 12 போட்டியாளர்கள் பாட உள்ளனர். இந்த நிலையில் முதல் வாரத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. 

Latest Videos

undefined

அதாவது, ஓலை பின்னும் தொழிலாளியான பாலமுருகன் மெகா ஆடிஷனில் பாடி நடுவர்களை மெய் சிலிர்க்க வைத்திருந்த நிலையில் அறிமுக சுற்றில் பாடும் போது நான் தென்றல் என்ற பாடலை பாடி அசர வைத்துள்ளார். சாதிக்க வயது தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார். 

அதே போல் இலங்கையை சேர்ந்த விஜய் லோஷன் என்ற போட்டியாளர் ஒரு மாலை இளம்வெயிற் காலம் என்ற பாடலை பாடி நடுவர்களை பிரம்மிக்க வைத்துள்ளார். கார்த்திக்குடன் சேர்ந்து இதே பாடலை ஒரு லைன் பாட வேண்டும் என்று ஆசைப்பட கார்த்திக்கும் விஜயுடன் சேர்ந்து பாடியுள்ளார். 

இலங்கையை சேர்ந்த இன்னொரு போட்டியாளரான இந்திரஜித் பாடி முடித்து நடுவர்களின் பாராட்டுகளை பெற்ற பிறகு நடுவர்கள் அவரிடம் உன்னுடைய ஆசை என்ன என்று என்று கேட்க SPB சமாதிக்கு போகணும் என்று சொல்ல கார்த்திக் அதுக்கான ஏற்பாடுகளை நான் செய்து தரேன் என்று வாக்கு கொடுத்து இந்திரஜித்தை உருக வைத்துள்ளார்.

அடுத்து போஸ்ட் வுமனாக வேலை செய்து வரும் சௌமியாவும் அசத்தலாக பாடி நடுவர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார். மேலும் தன்னுடைய ஊர் காரர்கள் ஒரு லெட்டர் கொடுத்து அனுப்பி இருப்பதாக சொல்லி அவரே எழுதிய லெட்டரை படித்து அலப்பறை செய்து அரங்கத்தை சிரிக்க வைத்துள்ளார். 

பிரம்மாண்டமான புதிய செட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கார்த்திக், ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இவர்களுடன் 16 ஜூரிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!