Vijay Sethupathi : "டைட்டில் செமையா இருக்கே".. மக்கள் செல்வனின் அடுத்த படம் ரெடி - வெளியான டைட்டில் டீசர்!

Ansgar R |  
Published : May 17, 2024, 07:15 PM IST

Makkal Selvan : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கனவே இரு படங்கள் உருவாகி வரும் நிலையில், இன்று அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகை பொருத்தவரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரமாகவும் நல்ல பல வேடங்களில் நடித்து மக்களை கவர்ந்த ஒரு மிகச் சிறந்த நடிகர் விஜய் சேதுபதி என்றால் அது என்றும் மிகையல்ல. 

ஏற்கனவே பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் "ட்ரெயின்" என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வரும் நிலையில், மகாராஜா என்ற பட பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்பொழுது நடிக்க உள்ளார். 

நடிகை ருக்மணி வசந்த், முன்னணி நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். விஜய் சேதுபதியின் 51வது திரைப்படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு "ACE" என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது.

02:39Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
01:5226-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
02:48'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
02:19எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
02:1715 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
03:10Music | என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
02:35மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!
02:45பாட்ஷா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலை ரிஜெக்ட் செய்த ரஜினி - அப்செட் ஆன தேவா!
Read more