வாரத்திற்கு ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து பாருங்க: அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
நமது உடலில் நாளுக்கு நாள் நச்சுத்தன்மை அதிகரித்து வருகிறது. இந்த நச்சுத்தன்மையை அடிக்கடி விரதம் இருந்தோ அல்லது சிலவகையான உணவுகள் மூலமாகவோ வெளியேற்றி விட வேண்டியது அவசியம். இல்லையெனில், உடலில் சேரும் கழிவுகளால் நோய்த் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
பழங்கால உணவுமுறைக்கும், தற்போதைய உணவு முறைக்கும் பல விதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பழங்கால உணவு முறையில், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வேகமாக நகரும் உலகில், நாமும் வேகமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனாலேயே, உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, நாம் நோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறோம். இதனைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதற்கு முடிந்தளவு சில நடைமுறைகளை கடைப்பிடித்தாலே போதுமானது. நமது உடலில் நாளுக்கு நாள் நச்சுத்தன்மை அதிகரித்து வருகிறது. இந்த நச்சுத்தன்மையை அடிக்கடி விரதம் இருந்தோ அல்லது சிலவகையான உணவுகள் மூலமாகவோ வெளியேற்றி விட வேண்டியது அவசியம். இல்லையெனில், உடலில் சேரும் கழிவுகளால் நோய்த் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
மிகச் சிறந்த காலை உணவு நீராகாரம்: ஏன் தெரியுமா?
உதாரணமாக, நாம் ஆசை ஆசையாய் கட்டிய வீடு, நாட்கள் செல்ல செல்ல பழையதாகி விடும். அப்போது, சுவர்கள், தரை மற்றும் வீடு முழுவதும் நிறைய அழுக்குகள் சேர ஆரம்பிக்கும். அதைப் போலவே, நம் உடலிலும் நாளுக்கு நாள் கழிவுகள் சேர ஆரம்பிக்கும். வீட்டை சுத்தப்படுத்தினால் அழுக்குகள் வெளியேறி எப்படி வீடு புதியதாக தோற்றம் அளிக்கிறதோ, அதே போல் நம் உடலிலிருந்தும் கழிவுகள் வெளியேறினால் உடலும், குடலும் புத்துணர்ச்சி அடையும்.
Hair Care : சொட்டைத் தலையில் ஆரோக்கியமான தலை முடி வளர அற்புதமான எண்ணெய் இதுதான்!
உடலுக்கு முழு ஓய்வு
தினமும் ஜிம்முக்கு சென்று வந்தாலும், வாரத்தில் ஒரு நாள் நம் உடலுக்கு முழு ஓய்வு அளிப்பது போல், கல்லீரலுக்கும், குடலுக்கும் முழு ஓய்வு அவசியம் தேவை. தினந்தோறும் உணவு உண்ணும் நிலையில், உடற்பாகங்கள் அனைத்தும் ஓயாமல் வேலை செய்கின்றது. நாம் விரதம் இருக்கவில்லை எனில் நமது உறுப்புகளுக்கு ஓய்வு என்பதே கிடைக்காது. இதன் காரணமாக வயிற்றில் சேர்ந்த அழுக்குகள் வெளியேறாமல், உடல் எடை அதிகரிக்கும். இதனால் வாரம் ஒருமுறை விரதம் இருந்து கழிவுகளை வெளியேற்றுவோம்.
மேலும், பருவகாலத்திற்கு ஏற்ற பழங்கள் மற்றும் தேங்காய் சாப்பிட்டு நச்சுபொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுவோம். வாரம் ஒருமுறை உண்ணாமல் இருப்பதால், நம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, உடல் சுத்தமாகும்.