மிகச் சிறந்த காலை உணவு நீராகாரம்: ஏன் தெரியுமா?
காலை உணவாக நீராகாரம் அருந்திச் சென்று, மதியம் வரை ஏர்ப் பிடித்து வேலை செய்வர். இது எவ்வகையில் சாத்தியம்? நீராகாரத்தின் பயன்கள் என்னென்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இப்பதிவில் பதிலைக் காண்போம்
காலை வேளையில் நம்மில் பலரும் இட்லி, தோசை, பொங்கல், வடை மற்றும் பூரி உள்ளிட்ட பல உணவுகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்குச் செல்வோம். இந்த உணவுகள் செரிமானமாக குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும். இதன் காரணமாக அடிக்கடி புளிப்பு ஏப்பம், வயிற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், கிராமங்களிலோ விவசாயிகள் பலரும் காலை உணவாக நீராகாரம் அருந்திச் சென்று, மதியம் வரை ஏர்ப் பிடித்து வேலை செய்வர். இது எவ்வகையில் சாத்தியம்? நீராகாரத்தின் பயன்கள் என்னென்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இப்பதிவில் பதிலைக் காண்போம்.
நீராகாரம்
கம்மங்கூழ் தொடங்கி நீர்மோர் வரை அனைத்துமே நீராகார வகையைச் சேர்ந்தவை தான். திட உணவுகளுக்கு மாற்றாக நீராகாரத்தை காலை உணவாக உட்கொண்டு சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான ப்ரோபயாடிக் சத்துகள் கிடைப்பது மட்டுமல்லாமல் செரிமானமும் எளிதாக நடக்கும்.
பண்டைய காலங்களில் நீராகாரம், மிகவும் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களின் உணவாக இருந்தது. ஆனால், இன்றைய நவீன உலகில் பெருநகரங்களில் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கும் நீராகாரம் அவசியமான உணவாகிறது.
அறுசுவையும் கலந்த ''தேங்காய்ப்பால் மீன் குழம்பு'' செய்வது எப்படி?
அரிசி மாவில் தயாரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் அதிகளவு கார்போஹைட்ரேட்டை உடலில் சேர்த்து விடுவதால், உடலில் வெற்று கலோரிகள் அதிகமாக சேர்க்கப்படும். இதனால் பகலில் சோர்வு மற்றும் தூக்கம் ஏற்படும். நீராகாரம், உடல் தசைகளுக்கு வெகுவிரைவாக சத்துகளை கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் சேராமல் நம் உடலைப் பாதுகாக்கிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் '''ஈரல் வறுவல்''!!
வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மிகச் சிறந்த காலை உணவாக திகழும் நீராகாரங்களைத் தயாரிப்பதும் மிக சுலபம். இவற்றுடன் மோர் மிளகாய், மாங்காய் கீற்று, அப்பளம் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் நீராகாரத்தின் சுவை இன்னும் அதிகரிக்கும்.
மசாலா மற்றும் கொழுப்பு சத்து அதிகம் நிறைந்த உணவுகளின் தாக்கத்தில் இருந்து, உடலை டீடாக்ஸ் செய்யும் உணவாக அமையும் நீராகாரங்கள், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்ற உணவாக உள்ளது.