முழுமையாக உடலுறவு வைத்து கொள்ள முடியலயா? ஆணுறுப்பு சற்று வளைந்தால்! இதுதான் குணமாக ஒரே வழி!!

First Published | Apr 6, 2023, 3:15 PM IST

முழுமையாக உடலுறவை அனுபவிக்க முடியாதவர்களின் பிரச்சனைகள் குணப்படுத்த முடியாத ஒன்றில்லை. அதன் காரணங்களை கண்டறிந்தால் பாதி பிரச்சனைகள் முடிந்துவிடும். 

 Male Sexual Problems: நடுத்தர வயதுள்ள சிலருக்கு உடலுறவு கொள்வதில் பிரச்சனை இருக்கிறது. செக்ஸ் உறவு கொள்ளும் போது ஆணுறுப்பு பெண்களின் யோனியில் நுழைவதில் சிரமம் இருக்கலாம். சிலருடைய ஆணுறுப்பு சற்று வளைந்து காணப்படும். பெண்ணுறுப்பின் உள்ளேயே செல்ல முடியாமல் அப்படியே நிற்கும். இதனால் கணவன் மனைவிக்குள் நெருக்கம் இல்லாமல் போய்விடும். இப்படி படுக்கையறையில் விரிசல் வந்து பிரிந்த ஜோடிகள் ஏராளம். 

இந்த பிரச்சனையை அன்கன்சமேட்டட் மேரேஜ் (unconsummated marriage) என சொல்வார்கள். திருமணமான பிறகும் செக்ஸ் வைத்து கொள்ள முடியாத இந்த நிலை 100இல் 4 பேருக்கு ஏற்படுகிறது. பல தம்பதியினர் இதை சொல்ல கூச்சப்பட்டு விவாகரத்து கூட செய்கிறார்கள். 


இப்படி உடலுறவில் முழுமை இல்லாமல் போக காரணம் ஆணோ பெண்ணோ கிடையாது. அன்கன்சமேட்டட் மேரேஜ் பிரச்சனைகளை மருத்துவத்தில் 100 சதவீதம் பூரணமாக குணப்படுத்தும் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிலருக்கு உடலுறவு சுமுகமாக இருந்தாலும் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படலாம். இதில் சிலருக்கு உறவில் ஈடுபடும்போது சிரமமாக இருக்கும். இதையும் முழுமையாக குணப்படுத்தலாம்.  

இதற்காக சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அதாவது உங்களுக்கு விறைப்புத்தன்மை சரியாக இருக்கிறதா? செக்ஸ் வைக்கும்போது விறைப்புத்தன்மை எப்படி இருக்கிறது என அறிய வேண்டும். இதை வைத்து உங்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். 

இதையும் படிங்க: கூட்டுக் குடும்பத்துல தாம்பத்தியம் கஷ்டம் தான்! ஆனா இந்த 4 வழி இருக்கு.. ஓப்பனா சொந்த அனுபவத்தை பகிரும் பெண்!

பாலியல் பிரச்சனைகள் என்று வந்துவிட்டாலே முதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும். எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்றில்லை. பாலியல் நிபுணரை சென்று சந்திக்க வேண்டும். உங்கள் துணையுடன் கலந்தாலோசிக்கலாம். இதுவே மனதை குழப்பத்தில் இருந்து மீட்கும். நல்ல உடலுறவுக்கு மனமும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். நலம் வாழுங்கள்!

இதையும் படிங்க: ஒன்பது மனைவிகள்... இப்போ முதல் குழந்தையை பெற போகும் மனைவி யார் என்ற போட்டி! புத்திசாலி கணவனின் அதிரடி முடிவு

Latest Videos

click me!