திருமணத்திற்கு புறம்பான உறவுகள் எந்த வகையில் நியாயப்படுத்தினாலும், அது ஏமாற்றுவேலை தான். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இந்தியர்களில் பலர் கள்ள உறவுகளை ஏற்றுகொள்வதாகவும், விஷயங்கள் வேறுமாதிரி மாறி வருவதாகவும் ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. இந்தியாவில் திருமணம், விபச்சாரம், மற்ற சமூக-கலாச்சார விஷயங்கள் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளன என்பது குறித்து டிஸ்கிரீட் ஆப் (discreet app) உடன் IPSOS இணைந்து ஆய்வு செய்தது.
இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவு என்பது, திருமணம் என்ற அமைப்பையும், விவாகரத்துச் சட்டங்களின் விளைவுகளையும் சார்ந்துள்ளது. அதாவது விவாகரத்து பெற்று பிரிவது எளிதான காரியமாக இருப்பதில்லை. குடும்பம் என்ற அமைப்பு அதற்கு நிறைய விதிகளை வைத்திருக்கும். அதனால் உறவுகள் ரகசியமாக தொடர்கின்றன. இன்னும் முக்கியமாக உறவுக்குள் நேர்மையாக இருப்பதை கட்டுப்பெட்டித்தனமாக கருதும் நிலை கூட ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியாவில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பெண்களால் உருவாக்கப்பட்ட அந்த செயலியில் 25 முதல் 50 வயதுக்குட்பட்ட திருமணமான 1,503 பேரிடம் சர்வே செய்யப்பட்டது. அதில், சுமார் 82% பேர் ஒருவருடன் மட்டும், வாழ்நாள் முழுவதும் உண்மையாக வாழ முடியும் என நம்புவதாக சொல்லியிருக்கிறார்கள். கிட்டதட்ட 44% பேர் ஒரே நேரத்தில் இரண்டு பேர் மீது காதல் வருவதும், காதலிப்பதும் கூட சாத்தியம் என நம்புகிறார்களாம். இதில் இன்னொரு தகவல் தெரியவந்துள்ளது. இந்த சர்வேயில் 55 சதவீதம் பேர் தங்கள் மனைவியைத் தவிர வேறு பெண்ணுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. சுமார் 37% நபர்கள் ஒருவரை காதலிக்கும் போது ஏமாற்றுவதும் சாத்தியம் என சொல்கிறார்கள். ஆக தன்னிடம் இருப்பதில் நிறைவு யாருக்கும் வராது போலேயே..!
புறக்கணிப்பு
நட்பு, உணர்வுகளுக்கு ஏற்ற துணை, உடல்ரீதியான நெருக்கம் ஒரு நபரின் மன ஆரோக்கியம், நலவாழ்வுக்கு அவசியமானது. இந்த விஷயங்கள் கிடைக்காமல் ஒருவர் புறக்கணிக்கப்பட்டதாக உணரும்போது அல்லது தனது துணையின் கவனத்தை இழக்கும் போது பிரச்சனை தலை தூக்குகிறது. நம்பவே முடியாத காரியங்கள் அப்போது தான் நிகழுகின்றன. இந்த கணக்கெடுப்பில் கூட 33 சதவீதம் பேர் தங்கள் உறவில் புறக்கணிக்கப்பட்டதாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
பழி வாங்குதல்
சிலர் தங்கள் துணை துரோகம் செய்த பிறகு அதே துரோகத்தை அவர்களுக்கு திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட 23 சதவீதம் பேர் இந்த விஷயத்தை ஒப்பு கொள்கிறார்கள். பழிவாங்கும் நோக்கில் வேறொரு உறவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
பாலியல் அதிருப்தி
இந்தியாவில் 32 சதவீதம் மக்கள் தங்கள் துணையிடமிருந்து பாலியல் அதிருப்தியை சந்திக்கின்றனர். இந்த சூழ்நிலை தான் துரோகத்திற்கு வழிவகுக்கிறது. தம்பதிகளிடையே உணர்ச்சி, உடல் தொடர்பு இல்லாதது நல்ல உறவுக்கு மிகப்பெரிய தடையாகும்.
இதையும் படிங்க: கணவன் மனைவிக்குள் இந்த 5 விஷயங்களை பேசுங்க..! அப்புறம் செக்ஸ் வாழ்க்கை வேற மாதிரி மாறிடும்.!
புதிய காதல்..!
புதிய காதல் உணர்வுகளை பெற விரும்புவதால் பலர் வேறொரு துணையை தேடுகிறார்கள். கிட்டத்தட்ட 32 சதவீதம் பேர் புதிதாக ஒருவரைச் சந்திப்பதன் மூலமும், வயிற்றில் பட்டாம்பூச்சிகளை பறப்பதை அனுபவிக்க விரும்புகிறார்கள். அதுவும் அந்த மகிழ்ச்சியை உணர ஆர்வமாக உள்ளனர்.
திருமணத்திற்குப் புறம்பான உறவை பலரும் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதாக மட்டுமே நினைக்கின்றனர். ஆனால் அதுமட்டும் காரணமில்லை. தாங்கள் எந்த வயதிலும் கவர்ச்சியாகவும், விரும்பத்தக்க நபராகவும் இருக்க முடியும் என்பதை நம்ப மக்களுக்கு புதிய உறவு தேவைப்படுகிறது. இது சிலருக்கு பெரும் ஈர்ப்பாக உள்ளது. அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, 31 சதவீதம் பேர் இந்த மாதிரி மனநிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
சுயமதிப்பு உயருமாம்..!
சிலருக்கு, திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பது சுயமதிப்பீட்டை அதிகரிக்கிறது. நம்மால் ஒரு பெண்ணை/ ஆணை ஈர்க்கமுடிகிறதே.. என்ற மனநிலை கள்ள உறவை ஊக்குவிக்கிறது. அதாவது ஒருவரை காதலிக்க வைப்பது தன்னம்பிக்கையை கொடுக்கிறது என்கிறார்கள். இதுக்கெல்லாம் கள்ள உறவா என்று கேட்டால்... கள்ள உறவுக்கு தனிக்காரணங்கள் இல்லை அது தேவைகளையும், சூழலையும் பொறுத்தது. ஆனால் உடன் வாழும் துணையை ஏமாற்றுவது திறமை அல்ல துரோகம். குற்றம். இதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை. நாம் செய்யும் காரியங்களை பிறர் நமக்கு செய்தால் ஏற்று கொள்வோமா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி..!
இதையும் படிங்க: பெண்ணுறுப்பில் பாம்பு.. ஆணுறுப்பில் சேவல் ரத்தம்... ஆப்பிரிக்காவின் நடுங்கவைக்கும் செக்ஸ் பழக்கங்கள்..!