குடிசையில் இருந்துட்டு குழந்தைக்காக போராடும் நயன்தாராவின் ஆக்‌ஷன் மூவி - ராக்காயி டைட்டில் டீசர் அவுட்!

First Published | Nov 18, 2024, 11:59 AM IST

Nayanthara Rakkayie Title Teaser :  நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ராக்காயி படத்தின் டைட்டில் டீசரை அவரது 40ஆவது பிறந்தநாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Nayanthara Action Movie Rakkayie Teaser, Rakkayie Title Teaser

Nayanthara Rakkayie Title Teaser : தமிழ் சினிமாவில் நடிகை விஜயசாந்திக்கு பிறகு அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு நடிகை யார் என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கெட்டிக்கார நடிகை. இவருக்கு மட்டுமே ஹீரோயினுக்கான கதைகள் சூப்பராவே ஒர்க் அவுட் ஆயிருக்கு.

நயன்தாரா ராக்காயி டைட்டில் டீசர்

Rakkayie Title Teaser

சரத்குமார் நடிப்பில் வந்த ஐயா படத்துல ஒரு வெகுளியாக கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இன்று கோலிவுட் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆண்டு வருகிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ஜெய், ஆர்யா, சிவகார்த்திகேயன் என்று எல்லா நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

Tap to resize

Rakkayie Movie Title Teaser, Nayanthara Action Movie Rakkayie Teaser

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், மூக்குத்தி அம்மன், ஓ2, அன்னபூரனி என்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் படங்களில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

Nayanthara, Nayanthara 40th Birthday, Nayanthara Rakkayie Title Teaser

கடைசியாக 2023 ஆம் ஆண்டு அன்னபூரணி படம் வெளியான நிலையில் இந்த ஆண்டு 2024ல் ஒரு படம் கூட அவரது நடிப்பில் வெளியாகவில்லை. டெஸ்ட் மற்றும் மன்னாங்கட்டி ஆகிய படங்கள் இந்த வருடம் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவரது நடிப்பில் டியர் ஸ்டூடண்ட்ஸ், ராக்கி, தனி ஒருவன் 2, மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

Senthil Nallasamy, Nayanthara Rakkayie Movie Teaser

இந்த நிலையில் தான் இன்று நயன்தாரா இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது பிறந்தநாளுக்கு ரசிகளுக்கு டிரீட் கொடுக்கும் வகையில் ராக்காயி படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுளனர். அதில் ஓல குடிசையில் வாழும் நயன்தாரா தன்னுடை மகளுக்காக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Rakkayie Teaser, Nayanthara Rakkayie Teaser

அதில், மிளகாயை உரலில் வைத்து இடிப்பது முதல் ஒரு கையில் பனை அரிவாளும் மற்றொரு கையில் தொரட்டியுடன் ஈட்டி சேர்ந்து இருப்பது போன்ற ஆயுதத்துடன் போராடும் ஒரு பெண்ணாக மிரட்டி விட்டிருக்கிறார். பின்னணி இசையும் டீசருக்கு பலம் சேர்ந்துள்ளது. இந்த டீசரை பார்க்கும் ஒவ்வொருவரையும் கண்டிப்பாக இந்த டீசர் மெய் சிலிர்க்க வைப்பதோடு ஏன் நயன்தாராவை கொண்டாடுகிறார்கள் என்பற்கான காரணமும் புரியும்.

Nayanthara 40th Birthday

நயனின் ராக்காயி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. நயன்தாரா ராக்காயி டைட்டில் டீசர் இயக்குநர் செந்தில் நல்லசாமி ராக்காயி படத்தை இயக்கி வருகிறார். டிரம்ஸ்டிக்ஸ் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ராக்காயி உருவாகி வருகிறது.

Nayanthara Rakkayie Title Teaser

இதற்கு முன்னதாக புலிக்குத்தி பாண்டி படத்தில் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார். பிரியங்கா மோகனனும் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா ராக்காயி டைட்டில் டீசர்

Latest Videos

click me!