ரூ.4600 கோடி சொத்து! இந்தியாவின் பணக்கார நடிகை இவங்க தான்! ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா இல்ல!

Published : Nov 18, 2024, 11:48 AM IST

ஐபிஎல் அணியின் இணை உரிமையாளரும், 90களில் பிரபல நடிகையாக வலம் வந்த ஒருவர்தான் இந்தியாவின் பணக்கார நடிகையாக இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம். 

PREV
16
ரூ.4600 கோடி சொத்து! இந்தியாவின் பணக்கார நடிகை இவங்க தான்! ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா இல்ல!
India's Richest Actress

திரைப்படங்களில் நடிப்பதற்கு கோடிக்கணக்கில் சம்பளம், பல தொழில்களில் முதலீடு மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் நடிகைகள் அதிக சொத்துக்களை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் பணக்கார நடிகை ரூ. 4,600 கோடி நிகர மதிப்பை வைத்திருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் இந்தியாவின் பணக்கார நடிகை என்ற பட்டம் ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் அல்லது ஆலியா பட் ஆகியோருக்கு சொந்தமானது அல்ல.

26
India's Richest Actress

ஆனால் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியின் இணை உரிமையாளரும், 90களில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை தான் இந்தியாவின் பணக்கார நடிகையாக இருக்கிறார். அவர் யார் தெரியுமா?

2024 ஹுருன் பணக்காரர்கள் பட்டியலின்படி, ஜூஹி சாவ்லாவின் சொத்து மதிப்பு ரூ.4,600 கோடி. திரைப்படங்கள், வெப் சீரிஸ், தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ மட்டுமின்றி, கிரிக்கெட் மற்றும் திரைப்படத் தயாரிப்பு போன்ற பல்வேறு வணிகங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஜூஹி சாவலா பணக்கார நடிகையாக இருக்கிறார்.

36
India's Richest Actress

2008 இல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையைப் பெற ஷாருக்கானுடன் ஜூஹி சாவ்லா கூட்டு சேர்ந்தார். இருவரும் இணைந்து ட்ரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினர், பின்னர் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஜூஹி சாவ்லா மற்றும் அவரது தொழிலதிபர் ஜே மேத்தா ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

46
India's Richest Actress

சுவாரஸ்யமாக, ஜூஹி சாவ்லாவின் வணிக கூட்டாளியான ஷாருக்கான், 2024 ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். பட்டியலில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் (ரூ 2,000 கோடி), அமிதாப் பச்சன் (ரூ 1,600 கோடி), மற்றும் கரண் ஜோஹர் (ரூ 1,400 கோடி) ஆகியோர் அடங்குவர்.

56
India's Richest Actress

மற்ற பிரபல நடிகைகளின் நிகர மதிப்பு என்ன?

ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்தியாவின் இரண்டாவது பணக்கார நடிகை, அவரின் சொத்து மதிப்பு ரூ.850 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.. 650 கோடி சொத்து மதிப்புடன் பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடத்தில் உள்ளார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் தனது பாத்திரங்களுக்கு மேலதிகமாக, பிரியங்கா தனது வருமானத்தை ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்து, திரைப்படங்களை தயாரித்து வருகிறார். மேலும் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

 

66
India's Richest Actress

ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளனர், அவர்களும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து குறிப்பிடத்தக்க தொகையை சம்பாதித்துள்ளனர். அலியா பட்டின் சொத்து மதிப்பு ரூ. 550 கோடி ஆகும். தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 500 கோடி என்று கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories