பள்ளி மாணவியாக மாறிய பிக்பாஸ் ஜனனி..! ஸ்கர்ட் அண்ட் ஷர்ட்டில் நடத்திய வேற லெவல் போட்டோ ஷூட்!

First Published | Aug 14, 2023, 4:13 PM IST

பிக்பாஸ் ஜனனி, தற்போது பள்ளி மாணவி போல் மாறி, நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் இலங்கையை சேர்ந்த ஜனனி. லாஸ்ட்லியாவுக்கு அடுத்தபடியாக பிக்பாஸ் ஜனனி, பிக்பாஸ் வீட்டின் உள்ளே என்ட்ரி ஆவதற்கு முன்பே ரசிகர்கள் சிலர் ஆர்மி துவங்கி இவரை வரவேற்றனர்.

இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினியான இவர், மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Dhanush: இந்த நடிகை தான் வேண்டும்!அடம்பிடித்து தளபதி நாயகியை கமிட் செய்த தனுஷ்! வாரி வழங்கப்படுகிறதா சம்பளம்?

Tap to resize

மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என, நினைத்த ஜனனிக்கு இது ஒரு ஜாக்பார்ட் வாய்ப்பாக அமையவே,  பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே அதிரடியாக களமிறங்கிய ஜனனி, ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு போட்டியாளராக இருந்தார்.

அதேபோல் கொஞ்சம் துடுக்காக வாயை விட்டு சில பிரச்சனைகளில் சிக்கினாலும், எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார். வந்த வேகத்திலேயே ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடிக்க தொடங்கினார் ஜனனி.

நடிகரின் அந்தரங்க உறுப்பில் இருந்து வெளியேறிய மாதவிடாய் மற்றும் விந்து! வெட்டி எடுத்தாச்சு.. கதறும் பிரபலம்!

அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யை வைத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படத்தில் ஜனனி சில நிமிடங்கள் மட்டுமே வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க துவங்கியுள்ளார்.

அவ்வபோது போட்டோ ஷூட் செய்து, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் ஜனனி... தற்போது பள்ளி மாணவி போல் ஸ்கர்ட்,  ஷர்ட், கழுத்தில் ஐடி கார்டு, தோளில் பேக் என மிகவும் க்யூட் ஆக எடுத்துக் கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அடுத்த தனுஷ் ரெடி... குடும்பத்தில் இருந்து புது ஹீரோவை களமிறக்கும் அசுரன் - சைலண்டாக நடக்கும் வேலைகள்

Latest Videos

click me!