
ஆர்யா:
எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல், விலகி செல்லும் நடிகர்கள் சிலர் இருந்தாலும்... ஒரு சில நடிகர்களுக்கு சர்ச்சையில் சிக்குவது என்பது, ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல். அப்படி சாயிஷாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு வரை, தன்னுடன் நடிக்கும் பல நடிகைகளுடன் டேட்டிங் செய்து, சர்ச்சையில் சிக்கியவர் தான் ஆர்யா. இவர் நடிகை பூஜா மற்றும் அனுஷ்காவுடன் டேட்டிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். குறிப்பாக அனுஷ்கா - ஆர்யா விவகாரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
அதே போல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம், 16 பெண் போட்டியாளர்களுடன் ஒரே டைமில்... சுமார் 2 மாதங்கள் டேட்டிங் செய்து, அதில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் ஒருவரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என கூறிய நிலையில், கடைசியில் ஏமாற்றினார். பின்னர்நடிகை சாயிஷாவை 'கஜினிகாந்த்' படத்தில் நடிக்கும் போது காதலிக்க துவங்கிய இவர், பின் அவரையே திருமணம் செய்து செட்டில் ஆனார். திருமணத்திற்கு முன் பல சர்ச்சையில் சிக்கி இருந்தாலும், திருமணத்திற்கு பின்னர் மனைவி, குழந்தை, குடும்பம் என மிஸ்டர் பர்ஃபெக்ட்டாக மாறி வாழ்ந்து வருகிறார் ஆர்யா.
சிம்பு:
40 வயதை கடந்த பின்னரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன்னுடைய 18 வயதிலேயே ஹீரோ அவதாரம் எடுத்த, இவர் சில பிரபலங்களை உண்மையாக காதலித்ததாக கூறப்பட்டாலும், ஏனோ இவருடைய காதல், திருமணத்தில் கைகூடாமல் போனது.
ரியல் லைப் மன்மதனான சிம்பு, பிரபல ஸ்டார் நடிகரின் மகளை காதலித்த நிலையில், அவர் ஏமாற்றிவிட்டு சென்றதால், சினிமாவில் கவனம் செலுத்த துவங்கினார். இதை தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் மலர்ந்த காதலும், ஒரே வருடத்தில் வாடி வதங்கியது... பின்னர் சில வருடம் கழித்து, ஹன்சிகாவை காதலித்தார். இந்த காதலும் சில மாதங்களில் பட்டு போக, தற்போது இளம் நடிகை ஒருவரை இவர் காதலித்து வருவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தாலும் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எப்படியும் இந்த ஆண்டு சிம்புவுக்கு திருமணம் நடப்பது சந்தேகம் என்றாலும், அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய், நயன்தாரா போல் பேரழகியா இருந்தாலும்.. பாஸ்போர்ட்டில் இப்படி தான் இருப்பாங்க!
சித்தார்த்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை அதிதி ராவ்வை, மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சித்தார்த்தும், இதுவரை பல நடிகைகளுடன் டேட்டிங் செய்து சர்ச்சையில் சிக்கியவர்.
'பாய்ஸ்' படத்தில் நடித்து முடித்த கையேடு, காதலி மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்தார்த், பின்னர் அவரிடம் இருந்து சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார்.
மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர், தெலுங்கு படத்தில் தன்னுடன் ஹீரோயினாக நடித்த ஸ்ருதி ஹாசனை காதலித்து வந்தார். இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்த நிலையில், சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்தனர். பின்னர் சித்தார்த், நடிகை சமந்தாவுடன் டேட்டிங் செய்தார். இந்த உறவும் சில வருடத்தில் முடிவுக்கு வந்தது. தற்போது நடிகை அதிதி ராவ்வை காதலித்து திருமணமும் செய்து கொண்டுள்ளார். இது இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன்:
உலக நாயகன் கமல்ஹாசன் 80-களில் இருந்தே காதல் நாயகனாக பார்க்க பட்டவர். இவருடைய படங்களில் முத்த காட்சிகள் இருக்கும் என்பதால், ஒரு சில நடிகைகள் இவருடன் நடிக்க தயக்கம் காட்டுவது உண்டு. இந்த தகவலை ஊர்வசி போன்ற நடிகைகள் வெளிப்படையாகவே கூறி உள்ளனர்.
ஸ்ரீவித்யாவை காதலித்து வந்த கமல், அவருடன் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக... டான்ஸர் வாணி கணபதியை திருமணம் செய்தார். வாணியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே... சரிகாவை காதலிக்க தொடங்கினார். சரிகா - கமல் பிரிய காரணமும் கமல் சில நடிகைகளுடன் வைத்திருந்த தொடர்பு என்றே கூறப்பட்டது.
மேலும் ஆண்ட்ரியா, சிம்ரன், போன்ற நடிகைகளுடன் டேட்டிங் செய்துள்ள கமல், நடிகை கவுதமியுடன் சில வருடங்கள்,லிவிங் டூ கெதர் வாழ்ந்தார். பின்னர் கவுதமி தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி பிரிவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் வரலாற்றிலேயே கம்மி சம்பளத்தோடு எலிமினேட் ஆன ரியா; அதுக்குன்னு இவ்வளவுதானா?
தனுஷ்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாகவே உள்ளார். சினிமாவில் வளர்ந்து வந்த நேரத்திலேயே... இளம் ஹீரோவின் காதலியை அபகரித்து திருமணம் செய்து கொண்டதாக விமர்சனங்களுக்கு ஆளான தனுஷ், தன்னுடன் நடிக்கும் நடிகைகள் பலருடன் அதீத நட்புடன் பழகி பிரச்சனையில் சிக்கியவர்.
குறிப்பாக நடிகை அமலா பால், த்ரிஷா போன்ற நடிகைகளும் இதில் அடங்குவர். தற்போது தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து பெற்று, தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில், தொடர்ந்து திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
விஷால்:
நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர் என பன்முக திறமையாளராக அறியப்படும் விஷால், 40 வயதுக்கு மேல் ஆகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.
இவர் நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் சில வருடங்கள் டேட்டிங் செய்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதே போல் நடிகை லட்சுமி மேனனுடனும் சில வருடங்கள் டேட்டிங் செய்தார். ஆனால் இந்த தகவலை அவர் மறுத்த நிலையில், ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நடைபெறாமல் போனது. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னர் அதில் தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என விஷால் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
காதல் தோல்வி தந்த வலி; கல்யாணம் தந்த சந்தோஷம் - ஆவணப்படத்தில் நயன்தாரா சொன்னதென்ன?