Published : Nov 18, 2024, 11:29 AM ISTUpdated : Nov 18, 2024, 12:47 PM IST
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா நடிப்பில் கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் டிசம்பர் 5 வெளியாக உள்ள புஷ்பா 2 படக்குழு கங்குவா படக்குழு சந்தித்த அதே பிரச்சனையை சந்தித்துள்ளது.
நடிகர் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்து வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது கங்குவா திரைப்படம். கங்குவா வெளியான முதல் நாளில் நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ பற்றிக்கொண்டது. குறிப்பாக சோசியல் மீடியாவில் சூர்யா ரசிகர்களுக்கும், மற்றவர்களுக்கும் பெரும் சண்டையை நடந்தது.
26
Suriya
நேற்று முதல் குடும்ப ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கங்குவா படம் பெற்று வருவதால், வசூல் குறையாது என்று எதிர்பார்க்கலாம் என்று திரைத்துறையினர் கூறுகின்றனர். கங்குவா படத்தின் குறையாக சவுண்ட் டிசைன், கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் வசனங்கள் பல இடங்களில் புரியாதது, லாஜிக் மீறல் என பல அடுக்கிக்கொண்டே போகலாம். இருப்பினும் கங்குவா மோசமான படமில்லை என்றே நடுநிலை ரசிகர்கள் கூறுகிறார்கள்.
36
Kanguva
நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, படத்தின் தொடக்கத்தில் ஆடியோ அதிக சத்தமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் 2ம் பாகத்துக்கு கங்குவாவைப் போல சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள புஷ்பா: தி ரூல் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
46
Pushpa 2
நேற்று (நவம்பர் 17) புஷ்பா: தி ரூல் படத்தின் டிரெய்லர் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஒரு பிரமாண்டமான நிகழ்வில் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் புஷ்பா 2வின் ஒலி வடிவமைப்பாளர் ரெசூல் பூக்குட்டி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒலியைப் பற்றி இதுபோன்ற விமர்சனங்களைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.
56
Allu Arjun
சத்தம் பற்றிய புகார்களால் எங்கள் படைப்பாற்றல் மறைக்கப்பட்டுள்ளது. கங்குவாவிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் சரி செய்யப்பார்க்கிறோம்” என்றார். திரையரங்கு உரிமையாளர்களிடம் அவர் ஒரு சிறப்பு கோரிக்கையை விடுத்தார்.
66
Resul Pookutty
பார்வையாளர்கள் படத்தின் ஒலியை விரும்பியபடி ரசிப்பதை உறுதிசெய்ய தங்கள் பெருக்கிகள் மற்றும் ஸ்பீக்கர்களை முன்கூட்டியே நன்றாக மாற்றுமாறு வலியுறுத்தினார். கங்குவா படத்துக்கும் ஒருமுறை தெளிவாக சரிபார்த்திருந்தால், இத்தகைய விமர்சனங்கள் வந்திருக்காது என்று புலம்புகின்றனர் சூர்யா ரசிகர்கள்.