பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் ஒரு மாதத்தை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் தீமில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் இந்த முறை 9 ஆண் போட்டியாளர்கள் 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். இதில் இரண்டு வாரங்களில் ரவீந்தர் மற்றும் அர்னவ் எலிமினேட் ஆன நிலையில், மூன்றாவது வாரம் தர்ஷா குப்தா வெளியேறினார். பின்னர் வைல்டு கார்டு எண்ட்ரி வந்ததால் ஒரு வாரம் எலிமினேஷன் இன்றி தப்பித்தனர்.
24
Wild Card Contestants
இதையடுத்து 5-வது வாரத்தில் சுனிதா எலிமினேட் ஆகி வெளியேறினார். பின்னர் 6-வது வாரத்திற்கான நாமினேஷனில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் 5 பேர் சிக்கினர். அவர்களில் இருந்து ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன்படியே மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற ரியா தியாகராஜன் இந்த வாரம் எலிமினேட் ஆகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
தான் எலிமினேட் ஆவேன் என துளியும் எதிர்பார்க்காத ரியா, பிக் பாஸ் முடிவை அறிவித்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த வீட்டில் இருந்த 14 நாட்களில் ஒருநாள் கூட தான் சோர்வடைந்து உட்கார்ந்ததில்லை. என்னை ஏன் எலிமினேட் செய்தார்கள் என்று கேள்வி எழுப்பி ரியா அழுததால் மனமுடைந்து போன விஜய் சேதுபதி அவருக்கு ஆறுதல் சொல்லி வழியனுப்பி வைத்தார். எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக இருக்கும் சத்யா, ரஞ்சித் ஆகியோரைவிட்டுவிட்டு ரியாவை ஏன் எலிமினேட் செய்தீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
44
Riya Thiyagarajan Salary
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கனவோடு வந்து கண்ணீரோடு எலிமினேட் ஆகி சென்ற ரியாவுக்கு இந்த சீசனில் மிகவும் கம்மியான சம்பளமே வழங்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த 14 நாட்களுக்காக அவருக்கு மொத்தமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வரலாற்றிலேயே மிகவும் கம்மியான சம்பளத்துடன் வெளியேறிய போட்டியாளர் ரியா தான் என்றும் சொல்லப்படுகிறது.