சுந்தரி சீரியல் முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன கேப்ரியல்லா! குவியும் வாழ்த்துக்கள்

First Published | Nov 18, 2024, 8:58 AM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில், அந்த தொடர் நாயகி கேப்ரியல்லா குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார்.

Sundari serial

சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் கேப்ரியல்லா செல்லஸ். கருப்பான தேகத்துடன் இருந்தால் நாயகியாக நடிக்க முடியாது என்கிற பிம்பத்தை தகர்த்தெறிந்து திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோயின் ஆகலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் கேப்ரியல்லா. சன் டிவி மூலம் பேமஸ் ஆனாலும் இவர் தன் பயணத்தை தொடங்கியது விஜய் டிவி மூலம் தான்.

Sundari serial crew

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட கேப்ரியல்லா, அதில் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தினார். இதையடுத்து டிக் டாக்கில் வீடியோ போட்டு ரசிகர்களை கவர்ந்த கேப்ரியல்லாவுக்கு அதன் மூலம் சினிமா வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி நடிகை நயன்தாரா உடன் ஐரா திரைப்படத்தில் முதன்முதலில் நடித்த கேப்ரியல்லா, பின்னர் ரஜினியின் கபாலி, லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்... காட்டுத்தீ போல் பரவிய விவாகரத்து மேட்டர்; வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த கேப்ரியல்லா!!

Tap to resize

Sundari serial Team

சினிமாவில் பெரியளவிலான வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய அவர், சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி சன் டிவியில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலில் கேப்ரியல்லாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அந்த சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாகவும் மாறி டிஆர்பி ரேட்டிங்கில் சக்கைப்போடு போட்டது. தற்போது வரை டாப் 10ல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் அண்மையில் முடிவடைந்தது.

Sundari serial Gabriella Pregnant

சுந்தரி சீரியல் முடிந்த கையோடு நடிகை கேப்ரியல்லா தன் கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக அண்மையில் செய்திகள் பரவியது. பின்னர் கணவரோடு ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்ரியல்லா, தற்போது குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார். அதன்படி அவர் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார். எதற்காக சுந்தரி சீரியல் திடீரென முடிக்கப்படுகிறது என்கிற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. கேப்ரியல்லா கர்ப்பமாக இருப்பதால் தான் அந்த சீரியலை அவசர அவசரமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Gabriella Sellus : சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா தொடங்கிய புது பிசினஸுக்கு கிடைக்கும் செம்ம ரெஸ்பான்ஸ்..!

Latest Videos

click me!