MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காட்டுத்தீ போல் பரவிய விவாகரத்து மேட்டர்; வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த கேப்ரியல்லா!!

காட்டுத்தீ போல் பரவிய விவாகரத்து மேட்டர்; வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த கேப்ரியல்லா!!

சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து பேமஸ் ஆன நடிகை கேப்ரியல்லா செல்லஸ் தன் கணவரை பிரிந்துவிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுபற்றி அவரே பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 28 2024, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gabriella Sellus

Gabriella Sellus

கருப்பாக இருந்தால் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைக்காது என்கிற பிம்பத்தை சுக்குநூறாய் உடைத்தெறிந்தவர் தான் கேப்ரியல்லா செல்லாஸ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து பேமஸ் ஆனார். இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கியது விஜய் டிவியில் தான். அதில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார் கேப்ரியல்லா. அதன் பின்னர் டிக் டாக்கில் விதவிதமான வீடியோ போட்டு ரசிகர்களை இம்பிரஸ் செய்தார் கேப்ரியல்லா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
sundari serial

sundari serial

இதன் பலனாக கேரியல்லாவுக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா உடன் ஐரா என்கிற திரைப்படத்தில் நடித்த கேப்ரியல்லா, பின்னர் சூப்பர்ஸ்டாரின் கபாலி, ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 போன்ற தமிழ் படங்களில் நடித்தார். சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தாலும் அவை அனைத்துமே சின்ன சின்ன ரோல்களாக இருந்ததால், சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார் கேப்ரியல்லா. அவருக்கு சன் டிவியில் சாக்லேட், சுந்தரி போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... அதிக நாட்கள் ஓடிய சூப்பர் ஹிட் சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி!

35
sundari serial gabriella Sellus

sundari serial gabriella Sellus

இதில் சுந்தரி சீரியல் தான் கேப்ரியல்லாவுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. இந்த சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் சீசன் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், அடுத்த சில தினங்களிலேயே அதன் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதிலும் கேப்ரியல்லா தான் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது சுந்தரி சீரியலின் இரண்டாவது சீசனும் விரைவில் முடிவடைய உள்ளது. இதனிடையே நடிகை கேப்ரியல்லா தனது கணவரை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக இணையத்தில் தகவல் ஒன்று பரவி வந்தது.

45
Gabriella Sellus husband

Gabriella Sellus husband

நடிகை கேப்ரியல்லா சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கேப்ரியல்லா குறும்படங்களில் நடித்தபோது அதில் கேமராமேனாக பணியாற்றிய சுருளியுடன் நெருங்கி பழகி வந்தார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் கேப்ரியல்லாவுக்கு பக்கபலமாக இருந்தவர் சுருளி.

55
Gabriella Sellus Latest Insta Photo with Husband

Gabriella Sellus Latest Insta Photo with Husband

இதனிடையே கேப்ரியல்லாவும், சுருளி மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய கணவர் சுருளி உடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை கேப்ரியல்லா.

இதையும் படியுங்கள்...  Gabriella Sellus : சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா தொடங்கிய புது பிசினஸுக்கு கிடைக்கும் செம்ம ரெஸ்பான்ஸ்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved