தனுஷை விட பணக்காரியா? நடிகை நயன்தாராவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

First Published | Nov 18, 2024, 7:25 AM IST

பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

Nayanthara

லேடி சூப்பர்ஸ்டார்

இந்திய சினிமாவில் ஹீரோயின்களின் மவுசு குறுகிய காலம் மட்டுமே என்கிற எழுதப்படாத விதி உள்ளது. உதாரணத்திற்கு ஒரு நடிகை 10 ஆண்டுகள் நீடித்தாலே அது ஆச்சர்யம் தான். ஒருவேளை அதற்குமேல் தாக்குப்பிடித்தாலும் அந்த நடிகைகள் படிப்படியாக குணச்சித்திர வேடங்கள், அண்ணி, அக்கா, அம்மா வேடங்கள் என ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள். ஆனால் இந்த நிலையை தகர்த்தெறிந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான நாயகியாக வலம் வருபவர் தான் நயன்தாரா.

2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த மனசினக்கரே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். திரைத்துறையை பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் பட்டம் என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. ரசிகர்களும் சூப்பர்ஸ்டார் எனும் கிரீடத்தை அவ்வளவு எளிதில் சூட்டிவிட மாட்டார்கள். எத்தனையோ தோல்விகளையும் விமர்சனங்களையும் சந்தித்து தன் விடாமுயற்சியால் மீண்டெழுந்து வெற்றிகள் மூலம் தன்னை மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்களே இங்கு சூப்பர்ஸ்டார்களாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள். அப்படி தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா.  

Actress nayanthara

நயன்தாரா பேமிலி

திரைத்துறையில் எந்தவித பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர் நயன்தாரா. இவர் கடந்த 1984-ம் ஆண்டு நவம்பர் 18ந் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு பாரம்பரிய கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தார். டயானா மரியம் குரியன் என்று இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக தன் பெயரை நயன்தாரா என மாற்றிக் கொண்டார். இவரின் தந்தை இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றியவர். இதன்காரணமாக தன் பள்ளி நாட்களை வட இந்தியாவில் கழித்தார் நயன்தாரா. தந்தையின் பணி ஓய்வுக்கு பின்னர் நயன்தாராவின் குடும்பம் கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள பூர்வீக வீட்டுக்கு குடிபெயர்ந்தனர்.

Tap to resize

Nayanthara Birthday

நயன்தாரா சினிமா எண்ட்ரி

கேரளாவில் கல்லூரி படிப்பை முடித்த நயன்தாரா, கல்லூரியில் படிக்கும்போதே தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பின்னர் மலையாள படங்களில் நடித்த நயன்தாராவின் குடும்பப்பாங்கான முகம் மற்றும் இயல்பான நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆன இயக்குனர் ஹரி அவரை ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார். 2005-ல் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் நயன்.

அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த நயன்தாரா, ஐயா படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த படமும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதால் கோலிவுட்டில் ராசியான ஹீரோயின் என பெயரெடுத்தார் நயன்தாரா. ஒருவர் பெரிய உயரத்துக்கு செல்ல செல்ல அவர்களை சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. 

Lady Superstar Nayanthara

காதல் சர்ச்சையில் சிக்கிய நயன்

அப்படி வல்லவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தபோது சிம்பு மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. அப்படம் முடிந்த கையோடு அவர்களின் அவர்கள் இருவரும் ஓட்டல் அறையில் முத்தமிட்டுக் கொண்ட புகைப்படம் லீக் ஆகி அவர்களின் காதலுக்கு எண்டு கார்டு போட்டது.

பின்னர் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டின் நம்பர் 1 நாயகியாக வலம் வந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலக முடிவு செய்தார். அதற்கு காரணம் பிரபுதேவா மீது அவர்கொண்ட காதல் தான். அந்த காதலுக்காக கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கும் மாறினார் நயன்தாரா. திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா - பிரபுதேவா ஜோடி, திடீரென ஏற்பட்ட மனக்கசப்பால் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

இதையும் படியுங்கள்... கையில் உலக்கையுடன் நயன்தாரா; ரணகளத்துக்கு மத்தியில் வெளியான புது பட அப்டேட்!

Nayanthara Love

காதலில் வென்ற நயன்

பின்னர் சினிமாவில் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நயன்தாராவுக்கு நானும் ரெளடி தான் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தான் நயனின் மார்க்கெட் மீண்டும் உச்சத்தை தொட்டது. அதுமட்டுமின்றி அப்படத்தின் போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார் நயன். அந்த காதல் 7 ஆண்டுகளாக நீடித்து இறுதியாக கடந்த 2022-ம் ஆண்டு திருமணத்தின் முடிந்தது.

Nayanthara Net Worth

நயன்தாரா சொத்து மதிப்பு

திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா, இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.12 கோடி வரை சம்பளமும் வாங்கி வருகிறார்.

Nayanthara Business

நயன்தாரா பிசினஸ் 

நடிகை நயன்தாரா சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கிறார். ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ள நயன்தாரா அதன்மூலம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர 9ஸ்கின் என்கிற அழகுசாதன  பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். மேலும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடும் செய்து கோடி கோடியாய் வருமானம் ஈட்டி வருகிறார்.

Nayanthara Assets

நயன்தாரா வீடு

நடிகை நயன்தாராவிடம் சொந்தமாக பிரைவேட் ஜெட்டும் உள்ளது. பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் ஒரே ஒரு தென்னிந்திய நடிகை என்கிற பெருமைக்கு சொந்தக்காரராகவும் நயன்தாரா உள்ளார். இதுதவிர ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ள நயன்தாராவுக்கு மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக ரூ.30 கோடி மதிப்பில் வீடுகள் உள்ளன. மேலும் ரூ.100 கோடி மதிப்பில் சென்னை போயஸ் கார்டனில் தன்னுடைய கனவு இல்லத்தை கட்டி அண்மையில் குடியேறினார். அந்த வீட்டில் ஜிம், தியேட்டர், நீச்சல் குளம் என சகல வசதியும் உள்ளது. இவரிடம் மெர்சிடிஸ் மேபேஜ், பிஎம்டபிள்யூ என பல ஆடம்பர கார்களும் உள்ளன. தனுஷும் நயன்தாரா கிட்டத்தட்ட ஒரே அளவு சொத்து மதிப்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... "கூட்டத்தாடி ரெண்டுபட்டா ஊருக்கே கொண்டாட்டம்" நயன் தனுஷ் சர்ச்சை - நச் பதில் கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி!

Latest Videos

click me!