காதல் தோல்வி தந்த வலி; கல்யாணம் தந்த சந்தோஷம் - ஆவணப்படத்தில் நயன்தாரா சொன்னதென்ன?

Published : Nov 18, 2024, 08:14 AM IST

நடிகை நயன்தாராவின் திரைப்பயணம் மற்றும் திருமணம் குறித்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், அவர் அதில் என்ன சொல்லி உள்ளார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
காதல் தோல்வி தந்த வலி; கல்யாணம் தந்த சந்தோஷம் - ஆவணப்படத்தில் நயன்தாரா சொன்னதென்ன?
Nayanthara

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் "நயன்தாரா - beyond the fairy tale" என்கிற பெயரில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அந்த ஆவணப்படத்தில் தங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது குறித்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பேசி இருக்கிறார்கள். 

அதன்படி, முதலில் பேசிய நயன்தாரா, தன் முதல் காதல் தோல்வி பற்றி பேசினார். அதன்படி அந்த முதல் காதல் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்தது மட்டுமின்றி அந்த காதலில் நான் உண்மையாக இருந்தேன் என தெரிவித்தார். மேலும் அந்த காதலுக்காக நான் மிகவும் நேசித்த சினிமாத் துறையை விட்டு விலக முடிவெடுத்தேன் என கூறிய அவர், திரைத்துறையை விட்டு விலகும் முடிவை தான் சுயமாக எடுக்கவில்லை என கூறி இருந்தார். 

24
Nayanthara Beyond the Fairy Tale

இருப்பினும் என் நம்பிக்கைக்கு உரியவராக அவர் இல்லை, இது குறித்து நான் எங்கும் பேசியதும் இல்லை. ஆனால் அந்த காதல் முறிவு குறித்து பலரும் பலவிதமான கதைகளை சொன்னார்கள். ஒரு உறவில் விரிசல் வரும் போது எல்லோரின் கேள்விகளும் பெண் மீது தான் இருக்கிறது. ஆண்களும் கேள்விகளுக்கு உட்பட்டவர் தான் என நயன்தாரா கூறினார்.

பின்னர் விக்கி உடனான காதல் பற்றி பேசிய நயன், பாண்டிச்சேரி சாலையில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பு நடைபெற்றபோது ஒரு நாள் சாலையில் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அன்று நான் விக்னேஷ் சிவனை பார்த்தபோது என்னுள் வித்தியாசமாக உணர்ந்தேன். அப்போது தான் எனக்குள் காதல் ஸ்டார்ட் ஆனது என நயன்தாரா தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்... கணவரைவிட 4 மடங்கு அதிக சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இதோ

34
nayanthara Documentary

அவரைத் தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஒரு நாள் நயனிடம் இருந்து மெசேஜ் வந்தது. அதில் படப்பிடிப்பு நாட்களை மிஸ் பண்றேன் என நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார். நானும் மிஸ் செய்கிறேன் என ரிப்ளை செய்தேன். பின்னர் படிப்படியாக எங்களது காதல் வெளியுலகுக்கு தெரிய வந்த பின்பு, எங்கள் காதல் குறித்து மீம் ஒன்று வந்தது. 

அதில் “நாகூர் பிரியாணி அந்த நாய்க்கு தான் கிடைக்கணும்னு இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது என அந்த மீமில் கலாய்த்து பதிவிட்டிருந்தனர். நானும் அதை காமெடியாகவே எடுத்துக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இடையே மாற்றுக் கருத்து வந்தால், நயன்தாரா முடிவுக்கே கட்டுப்பட்டு செல்வது நல்லது. அதை தான் நானும் பின்பற்றி வருகிறேன் என விக்னேஷ் சிவன் கூறினார்.

44
Nayanthara Vignesh Shivan

பின்னர் நயன்தாரா பேசுகையில், விக்னேஷ் போன்ற ஒரு ஆண் துணை தான் உனக்கு கணவராக கிடைக்க வேண்டும் என நான் வேண்டினேன் அது நடந்தது என என் அம்மா என்னிடம் சொன்னார். என் அம்மாவை தவிர்த்து யாரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது என நான் அடிக்கடி சொல்வது உண்டு. ஆனால் உறுதியாக சொல்கிறேன். விக்னேஷ் சிவன் என் அம்மாவை விட நன்றாக பார்த்துக் கொள்கிறார். இதையே என் 
அம்மாவும் என்னிடம் சொன்னார் என நயன்தாரா கூறினார்.

நான் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் இல்லாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக நயன்தாரா அந்த ஆவணப்படத்தில் கூற... அதைக் கேட்ட விக்கி, அப்படியெல்லாம் இல்லை; நயன்தாரா வந்த பின்னர் தான் என் வாழ்க்கையே தொடங்கியது என விக்னேஷ் சிவன் கூறினார். இருவரும் காதல் பொங்க தங்கள் ரொமாண்டிக் லவ் ஸ்டோரியை சொல்லி உள்ள அந்த ஆவணப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கையில் உலக்கையுடன் நயன்தாரா; ரணகளத்துக்கு மத்தியில் வெளியான புது பட அப்டேட்!

Read more Photos on
click me!

Recommended Stories