அம்பானி பாணியில் பரிசுகளோடு திருமண அழைப்பிதழை ரெடி பண்ணிய நாக சைதன்யா!

First Published | Nov 18, 2024, 10:44 AM IST

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, சமந்தா உடனான விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதா துலிபாலாவை கரம்பிடிக்க உள்ள நிலையில், அவரின் திருமண அழைப்பிதழ் வைரலாகிறது.

Naga Chaitanya - Sobhita Dhulipala wedding Date

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஜோடியின் திருமணம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருமண தேதி நெருங்கி வருவதால் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. திருமண அழைப்பிதழுடன் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. நாக சைதன்யா-சோபிதா ஜோடியின் திருமண அழைப்பிதழ் குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

wedding Card

திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அதில் மணமகன் நாக சைதன்யாவின் தாயுடன், மாற்றாந்தாய் மற்றும் தந்தையின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. நாக சைதன்யா, நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கீழே சரத் விஜயராகவன் மற்றும் லட்சுமி கமலா ஆகியோர் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. நாக சைதன்யாவிற்கு அமலா மாற்றாந்தாய், சரத் மாற்றாந்தந்தை ஆவார். மேலும், அழைப்பிதழில் ANR தம்பதியினர் மற்றும் D. ராமானாயுடு தம்பதியினரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 

Tap to resize

Sobhita Dhulipala

சோபிதா துலிபாலாவின் வீட்டில் திருமண கொண்டாட்டங்கள் கடந்த மாதமே தொடங்கிவிட்டன. அந்த புகைப்படங்களை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்து திருமண பாரம்பரியத்தில் மஞ்சள் அரைப்பது மிக முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். இந்த நிகழ்வுடன் சோபிதா-நாக சைதன்யாவின் திருமண விழாக்கள் தொடங்கியுள்ளன.

இவர்களது திருமணம் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளதாம். அங்குதான் திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாக சைதன்யா-சோபிதா இருவரும் காதலித்து வருகின்றனர். அவ்வப்போது அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் கசிந்தன. காதல் வதந்திகளை இந்த ஜோடி பலமுறை மறுத்தனர். திடீரென்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து அதிர்ச்சி அளித்தனர். 

இதையும் படியுங்கள்... விவாகரத்தான நடிகரை ரூ.3310 கோடி சொத்துக்காக வளைத்து போட்டாரா? யார் இந்த தமிழ் பட ஹீரோயின்?

Naga Chaitanya - Sobhita Wedding Invitation

சோபிதா - நாக சைதன்யாவின் திருமணத்தை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சோபிதா துலிபாலா ஆந்திரப் பிரதேச மாநிலம், தெனாலியில் பிறந்த தெலுங்குப் பெண். அவர் மாடலிங் செய்துள்ளார். மும்பையில் அவரது வாழ்க்கை தொடங்கியது. பாலிவுட்டில் சோபிதா அதிக படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 'குடாச்சாரி', 'மேஜர்' படங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்பில் உள்ள 'குடாச்சாரி 2' படத்திலும் சோபிதா நடிக்கிறார் என்ற தகவல் உள்ளது. இதுதவிர 'மங்கி மேன்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். 
 

Naga Chaitanya - Samantha

நாக சைதன்யாவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 இல் பிரிந்தனர். நாக சைதன்யாவின் திரைப்பட வாழ்க்கையைப் பார்த்தால்.. சந்து மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இந்தப் படம் ஒரு உணர்ச்சிபூர்வமான காதல் கதையாக உருவாகிறது. 

இதையும் படியுங்கள்... சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜுனா வீட்டு வாரிசை திருமணம் செய்ய போகும் விஜய் பட ஹீரோயின்?

Latest Videos

click me!