டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
எனவே இந்த புதிய முறையால் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் தனிப்பட்ட முறையில் பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாயை ஊழியர்கள் கேட்டு வருவது தெரியவந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவியது.
இதனை தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரிகள் அந்த கடையில் பணியாற்றிய மேற்பார்வையாளர்கள் 2 பேர், 6 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.