அரசு பேருந்தில் முன் பதிவு பயணம்.! இன்று முதல் சூப்பரான திட்டம் அறிமுகம்- போக்குவரத்து கழகம் அறிவிப்பு

First Published | Nov 18, 2024, 10:28 AM IST

அரசு பேருந்துகளில் பயணம் செய்வோருக்குப் ஏற்கனவே பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பேருந்தில் பயணம் செய்வதற்கான முன் பதிவு செய்யும் காலத்தை நீட்டித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

bus stand

அரசு பேருந்து போக்குவரத்து

மக்களின் அடிப்படை தேவைகளில் முக்கியமானது போக்குவரத்து,  குறைந்த கட்டணத்தில் வெளியூர் செல்வதற்கு பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது அரசு பேருந்துகளை தான். அந்த வகையில் தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும்.

எனவே அந்த பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் விரும்புவார்கள். குறிப்பாக தீபாவளி, பொங்கல், ரம்ஜான், புத்தாண்டு போன்ற காலங்களில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக இருந்தாலும் அரசு பேருந்துகளிலோ மக்கள் எப்போதும் பயன்படுத்தும் குறைவான கட்டணத்திலையே இயக்கப்படும்.
 

TAMILNADU BUS

சாதனை படைத்த அரசு பேருந்து

கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி இதுவரை இல்லாத அளவிற்கு பல லட்சம் பயணிகள் அரசு பேருந்தில் பயணம் செய்தனர். மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி, இரு சக்கர வாகனம், எல்இடி டிவி, ஃபிரிட்ஜ் போன்ற பரிசுகளை அறிவித்துள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் பயணம் செய்பவர்களுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


tamilnadu bus

அரசு பேருந்து - முன் பதிவு காலம்

இதனிடையே வெளியூர் பயணம் செய்ய விரும்புபவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே திட்டமிடுவார்கள். இதற்காக ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்வார்கள். அந்த வகையில் அரசு பேருந்தில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும். இதனை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு  அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

KILAMBAKKAM

60 முதல் 90 நாட்காளக அதிகரிப்பு

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில், பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத் திட்டமிடலுக்கு ஏதுவாக, தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதனை 90 நாட்கள் என உயர்த்தி 18 நவம்பர், 2024 மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

click me!