உதயநிதி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட யோகி பாபு மகள் பிறந்தநாள்! வைரல் போட்டோஸ்!

First Published Oct 24, 2023, 12:17 PM IST

பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபுவின் மகள் பரணி கார்த்திகாவின் முதல் பிறந்தநாள் நேற்று மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில், இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக கலக்கி வந்த, வடிவேலு, சந்தானம் ஆகியோர்... ஹீரோ ட்ராக்குக்கு மாறி பயணிக்க துவங்கியதால், அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப வந்த புதிய காமெடி நடிகர்கள் தான் யோகி பாபு, சூரி போன்றவர்கள்.

Leo Day 5 Collection: போட்ரா வெடியா... வசூல் மழை பொழியும் 'லியோ'..! இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?
 

இவர்களில் தன்னுடைய எதார்த்தமான காமெடியால்... மிக குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில், நிலையான காமெடி நடிகராக அச்சாரமிட்டு நின்றார் யோகி பாபு. 
 

முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இவர், ரஜினி, அஜித், விஜய் என முன்னணி தமிழ் நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் எவ்வித பாகுபாடு இன்றி நடித்து வருகிறார்.

பூவா தலையா சீரியலால்.. சூப்பர் ஹிட் சீரியலுக்கு வந்த சோதனை! அதிரடியாக மாற்றப்படும் நேரம்.. கடுப்பில் ரசிகர்கள்

அதே நேரம், இவரை கதையின் நாயகனாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து வரும் நிலையில்... தன்னுடைய குடும்பத்திற்காக இனி வருடத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே கதையின் நாயகனாகவும், மீதம் காமெடி ரோல்களில் மட்டுமே நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஓய்வில்லாமல் ஒரு புறம் யோகி பாபு பிசியாக நடித்து வந்தாலும், மற்றொரு புறம் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு நேரம் செலவிடவும் மறந்ததில்லை. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

யோகி பாபு,  கடந்த 2020 ஆம் ஆண்டு,  பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு, இவருக்கு விசாகன் என்கிற அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இதை தொடர்ந்து மீண்டும் கர்ப்பமான பார்கவிக்கு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. யோகி பாபு தீவிர முருகர் பக்தர் என்பதால் பரணி கார்த்திகா என தன் மகளுக்கு பெயரிட்டார்.

விஜய் டிவியில் TRP-க்காக நடக்கும் தில்லு முல்லு! ரஜினி மற்றும் விஜய் படங்களின் அட்ட காப்பியால இருக்கு?

இந்நிலையில், நேற்று யோகி பாபு தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார். இதில் விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி, ஜெயம் ரவி, விஜய் வசந்த், உள்ளிட்ட பல திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

குறிப்பாக நடிகர் ஜெயம் ரவி, தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியுடன்... யோகி பாபு மகள் பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்து கூறினார்.

அதே போல் பெரிதாக பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதை தவிர்க்கும், பிரபல தயாரிப்பாளரும், அரசியல் பிரபலமுமான கலாநிதி மாறனும் யோகி பாபு மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். 

நடிகை குஷ்பூவும் தன்னுடைய கணவர் சுந்தர் சி-யுடன், யோகி பாபு மகள் பரணி கார்த்திகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, யோகி பாபுவின் தாயார், மனைவி என அனைவருடனும் பேசி மகிழ்ந்தார்.

அதே போல் பிரபல இயக்குனரும், அமலா பாலின் முன்னாள் கணவருமான ஏ.எல் விஜய்யும் யோகி பாபு வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு, குழந்தைக்கு அழகிய பரிசு ஒன்றையும் கொடுத்து அசத்தினார்.

உடல்நல பிரச்சனைக்கு பின்னர் அதிகம் வெளியில் வருவதை தவிர்த்து வந்த டி.ராஜேந்தர் அவர்களும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இவர்களை தவிர பல இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!