பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் நேற்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டார்.
சவுக்கு சங்கர் கைது
பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் அரசியல் தலைவர்கள்,அரசு அதிகாரிகளை விமர்சித்து தொடர்ந்து ஒருமையில் பேசி வந்தார். இந்த சூழ்நிலையில் ரெட் பிக்ஸ் என்ற யூ டியூப் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் தொடர்பாக அவதூறு கருத்து கூறினார். இதனால் சவுக்கு சங்கரின் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். இதனையடுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டப்போது போலீசார் தாக்கியதாகவும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அடுத்தடுத்த வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது
இதனையடுத்து கஞ்சாவை தனது காரில் பதுக்கி வைத்திருந்தாக கூறி சவுக்கு சங்கரை தேனி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவை சிறையில் இருந்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கரின் கையில் கட்டுப்போட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில் சவுக்கு சங்கரை பிடிக்காதவர்கள் சிறையில் சவுக்கு சங்கரை தாக்கியிருக்கலாம் என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் மீது சென்னையில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கினார்.
ஊர் ஊராக அழைத்து செல்லும் போலீஸ்
இதனையடுத்து இன்று அதிகாலை கோவையில் இருந்து சென்னைக்கு சவுக்கு சங்கரை போலீசார் அழைத்து சென்றனர். இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டப்பிறகு மாலையே கோவைக்கு அழைத்து செல்லவுள்ளனர்.இதனையடுத்து திருச்சி மற்றும் சேலத்திலும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக நாளை அல்லது நாளை மறுதினம் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் மீண்டும் அந்த அந்த ஊர்களுக்கு அழைத்து செல்வார்கள் என கூறப்படுகிறது.