Chennai Accident: ரிசல்ட்டை பார்க்கும் முன்பே விபத்தில் பலியான 10ம் வகுப்பு மாணவன்.. சென்னையில் நடந்த சோகம்.!

Published : May 10, 2024, 11:45 AM ISTUpdated : May 10, 2024, 11:49 AM IST
Chennai Accident: ரிசல்ட்டை பார்க்கும் முன்பே விபத்தில் பலியான 10ம் வகுப்பு மாணவன்.. சென்னையில் நடந்த சோகம்.!

சுருக்கம்

சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 

சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில் ரிசல்ட்டை பார்க்கும் முன்பே விபத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மதுரவாயல் பாலத்தின் கீழே இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது லாரி மோதியது. 

இதையும் படிங்க: பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் திடீர் ரத்து! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

இந்த விபத்தில் மாணவன் ஜீவா சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  தம்பியின் மாமியாரை மடக்கி உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலை விடாத அண்ணன்! இறுதியில் பயங்கரம்!

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு தப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்க்கும் முன்பே மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!