Asianet News TamilAsianet News Tamil

Savukku : சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீஸார் திடீர் ரெய்டு.! கதவை உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் தேனி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Theni police made a surprise raid at SavKku Shankar office KAK
Author
First Published May 10, 2024, 11:22 AM IST

 சவுக்கு சங்கர் கைது

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் அரசியல் தலைவர்கள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை விமர்சித்து தொடர்ந்து ஒருமையில் பேசி வந்தார். இந்த சூழ்நிலையில் யூ டியூப் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் தொடர்பாக அவதூறு கருத்து கூறினார். இதனால் சவுக்கு சங்கரின் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சென்னை, திருச்சி, சேலம், கோவை என அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதியப்பட்டு வரும் நிலையில் தேனி போலீசார் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த மசேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

சவுக்கு சங்கர் அலுவலகத்தில் திடீர் சோதனை

இந்தநிலையில்  சென்னை தியாகராய நகர் ராஜா பாதர் தெருவில் உள்ள சவுக்கு மீடியா அலுவலகத்தில் தற்போது தேனி போலீசார் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் உள்ளே நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். சவுக்கு சங்கர் அறையின் சாவி இல்லாத காரணத்தால் போலீசார் சவுக்கு சங்கர் அலுவலக கதவை உடைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் ஏதேனும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா என சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சா விற்பனை மேற்கொண்ட நபர்களிடம் எவ்வாறு சவுக்கு சங்கருக்கு தொடர்பு ஏற்பட்டது

எத்தனை ஆண்டு காலமாக இது நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் அவர் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய வங்கி கணக்குகள் அலுவலகத்தில் ஏதாவது கஞ்சாக்கள் வைத்திருக்கிறாரா என்பது குறித்தும் அதிரடியாக தீவிர சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனர்.

வெளுத்து வாங்கும் மழை... பெங்களூரில் தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானங்கள்-ஆபத்பாந்தவனாக காப்பாற்றிய சென்னை

Follow Us:
Download App:
  • android
  • ios