Star Movie Review: கவின் நடிப்பில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஸ்டார்.. ரசிகர்கள் மத்தியில் மின்னியதா?

Published : May 10, 2024, 12:20 PM ISTUpdated : May 10, 2024, 01:14 PM IST
Star Movie Review: கவின் நடிப்பில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஸ்டார்.. ரசிகர்கள் மத்தியில் மின்னியதா?

சுருக்கம்

நடிகர் கவின் இயக்குனர் இளன் இயக்கத்தில் நடித்து வெளியாகி உள்ள 'ஸ்டார்' திரைப்படத்தின், twitter விமர்சனம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் கவின், கண்டமேனிக்கு படங்களில் நடிக்காமல்,  தொடர்ந்து தரமான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் கவின் நடிப்பில் வெளியான 'லிப்ட்', 'டாடா' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் 'ஸ்டார்' திரைப்படம் வெளியாகி உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், இப்படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக, அதிதி போகன்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிக்க... லால் மற்றும் கீதா கைலாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சிறு வயதில் இருந்தே தன்னுடைய தந்தை நீ நடிகனாக வேண்டும் என சொல்லி சொல்லி வளர்க்கும் நிலையில், நடிகனாக ஜெயிக்க கவின் சந்திக்கும் பிரச்சனைகளை... எமோஷனல், காதல், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக 'ஸ்டார்' படத்தில் கூறியுள்ளார் இளன். இதற்க்கு முன் வெளியான படங்களை விட வித்தியாசமான கதைக்களம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி நிலையில், நிஜத்தில் ஸ்டார் ரசிகர்கள் கண்களுக்கு மின்னியதா..? இல்லையா என்பது பற்றி பார்க்கலாம்.

ரசிகர் ஒருவர் ஸ்டார் திரைப்படம் சிறந்த படைப்பு. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கவினுக்கு மற்றொரு பிளாக் பஸ்டர் ஹிட் தயாராகி கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர் போட்டுள்ள எக்ஸ் பதிவில், அருமை, அழுத்தமான எமோஷன் காட்சிகள். கவின் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிதி போஹன்கர் மற்றும் மற்ற நடிகர்களின் நடிப்பு சூப்பர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை கண் கலங்க செய்துள்ளது. இளன் தன்னுடைய சிறப்பான படைப்பை கொடுத்துள்ளார் என கூறி இந்த படத்திற்கு 3.5 ரேட்டிங்கை தன்னுடைய கண்ணோட்டத்தில் இருந்து கொடுத்துள்ளார்.

 

இன்னொரு ரசிகர், ஸ்டார் திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் சிறந்த படம் என கூறி, பயர் எமோஜியை பறக்க விட்டுள்ளார். கவின் தனித்துவமான தன்னுடைய 100 சதவீத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையையும், புகழ்ந்து தள்ளியுள்ளார். 'GOAT' படத்தின் இசைக்காகவும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் இந்த ரசிகர்.

 

இந்த படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ள மற்றொரு ரசிகரோ.. " திரையரங்குகளில் ஸ்டார் திரைப்படம், உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். ஒரு சினிமாட்டிக் அனுபவத்தைத் தவறவிடாதீர்கள் என கூறியுள்ளார்.

ரசிகர் ஒருவர் 'ஸ்டார்' படத்தை ரகம் பிரித்து ரேட்டிங் கொடுத்துள்ளார். அவர் போட்டுள்ள பதிவில், 'ஸ்டார் படத்தின் விமர்சனம், இப்படத்தின் கமர்ஷியல் ரேட்டிங் 4.5/5, கண்டென்ட்டுக்கான ரேட்டிங் 5/5. இளம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆக கூறியது இப்படம். கவின் இப்படத்தின் மூலம் சம்பவம் செய்துள்ளார். எமோஷனை மட்டுமே எதிர்பார்த்ததாகவும், ஆனால் இப்படம் ஊக்குவித்தது. இதனால் சிறு ஆச்சர்யம் அடைந்தேன். இளன் இப்படத்தின் மூலம் சிறப்பான படைப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகரும் இப்படத்தை பார்த்து விட்டு, ஸ்டார் படம் அருமையான எமோஷ்னல் மற்றும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறது. வாழ்த்துக்கள் இளன். வேற லெவல் ரைட்டிங், கிளைமேக்ஸ் தரம். முதல் பாதியிலேயே ஆச்சர்யப்படுத்தி விட்டீர்கள். எல்லாவற்றையும் ரசிக்க முடிந்தது. யுவன் ஷங்கர் ராஜா BGM இசையில் ரசிகர்கள் மனதை ஜெயித்து விட்டார் என புகழ்ந்து தள்ளியுள்ளார். மொத்தத்தில் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை