
தமிழ் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்த் தற்பொழுது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தத் திரைப்படத்தின் படபிடிப்புப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இறுதி கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான படப்பிடிப்பு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் 7 நாட்கள் நடைபெற உள்ளது. தற்பொழுது 4 நாட்கள் நிறைவடைந்த நிலையில், வெளி நாட்டவருடன் ரஜினிகாந்த் சண்டை இடும் காட்சிகள் படப்பிடிப்பில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சண்டை காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரி நகரத்தையே சுற்றி வருகிறது. மேலும் மிஷின் துப்பாக்கிகளுடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை படைப்பிடிப்பு முடித்து கேரவனில் இருந்து வேட்டி, சட்டையுடன் ரஜினிகாந்த் இறங்கி வரும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அதனை அடுத்து அவர் தனது காரில் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.