ராட்சச நடிகருடன் ஆரம்பமாகும் கொரோனா குமார் - ஷூட்டிங் அப்டேட் இதோ

First Published Mar 5, 2024, 1:36 PM IST

கோகுல் இயக்கத்தில் உருவாக இருந்த கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகிய நிலையில், தற்போது அவருக்கு பதில் பிரபல நடிகர் ஒப்பந்தமாகி உள்ளார்.

corona kumar

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் கோகுல். இதையடுத்து கார்த்தியை வைத்து காஷ்மோரா, விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், கடைசியாக ஆர்.ஜே.பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்தது. அப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து இருந்தார்.

Vishnu Vishal

சிங்கப்பூர் சலூன் படத்தின் வெற்றி விழாவில் பேசுகையில், தன்னுடைய அடுத்த படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என இயக்குனர் கோகுல் கூறி இருந்தார். ஆனால் அந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்கள் என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை. இந்நிலையில், கோகுல் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள நடிகர் பற்றிய ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... தலைமுடி முழுவதும் நரைத்து... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன தலைநகரம் பட ஹீரோயின்? வைரலாகும் போட்டோ

Vishnu Vishal with director gokul

அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் தான் கோகுலின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். அதுவும் கொரோனா குமார் படத்தில் தான் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். சிம்புவை வைத்து கடந்த 2021-ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் கொரோனா குமார். அப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பின்னர் வேல்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் சிம்பு, கொரோனா குமார் படத்தில் இருந்து விலகிவிட்டார்.

Vishnu Vishal replace simbu in Corona kumar

இதையடுத்து சிம்புவுக்கு பதிவில் சந்தானம், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் அப்படத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் இறுதியாக அந்த வாய்ப்பு விஷ்ணு விஷாலுக்கு சென்றுள்ளது. அதன்படி கொரோனா குமார் திரைப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறதாம். இதுதவிர விஷ்ணு விஷால் தயாரிப்பிலும் ஒரு படத்தை இயக்க இயக்குனர் கோகுல் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 100 கோடி வசூல்... தமிழ்நாட்டில் ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை தட்டிதூக்க காத்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ்..!

click me!