சூர்யகுமார் யாதவ் சதம் விளாசி சாதனை – நொந்து போன ஹைதராபாத் வீரர்கள்: MIக்கு 4ஆவது வெற்றி!

First Published May 7, 2024, 12:33 AM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 55ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 55ஆவது லீக் போட்டியில் வான்கடே மைதானத்தில் நடைபெற் வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

இதில், போட்டியின் முதல் ஓவரை நுவான் துஷாரா வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. 2ஆவது ஓவரை அறிமுக வீரர் அன்ஷூல் கம்போஜ் வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. துஷாரா வீசிய 3ஆவது ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. பின்னர் 4ஆவது ஓவர் பும்ராவிற்கு கொடுக்கப்பட்டது.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மறுபடியும் கம்போஜ் வந்தார். அவர் வீசிய 5ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் டிராவிஸ் ஹெட் கிளீன் போல்டானார். இதையடுத்து அவர் வெளியில் நடந்து சென்று கொண்டிந்த போது நோபாலுக்கான சிக்னல் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஹெட் மீண்டும் பேட்டிங் செய்தார். ஆனால், தனது அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்த கம்போஜ் மகிழ்ச்சியில் கொண்டாடினார்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

ஆனால், அதற்குள்ளாக நோபால் கொடுக்கப்படவே ஏமாற்றம் அடைந்தார். அடுத்த பந்திலேயும் நோபால் வீசினார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கொடுத்தார். 5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 51 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பும்ரா பந்து வீச வந்தார். அந்த ஓவரில் அபிஷேக் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில், இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

அடுத்து அன்ஷூல் கம்போஜ் தனது முதல் விக்கெட்டாக மாயங்க் அகர்வால் விக்கெட்டை கைப்பற்றினார். 2 முறை அவுட்டிலிருந்து தப்பித்த ஹெட் 48 ரன்களில் நடையை கட்டினார். நிதிஷ் ரெட்டி 20, ஹென்ரிச் கிளாசென் 20, மார்கோ ஜான்சென் 17, ஷாபாஸ் அகமது 10, அபதுல் சமாத் 3 என்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக பேட் கம்மின்ஸ் 35 ரன்கள் எடுத்துக் கொடுக்கவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங்கை பொறுத்த வரையில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டும், அன்ஷூல் கம்போஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் 9, ரோகித் சர்மா 9 மற்றும் நமன் திர் 0 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்த நிலையில், அதனை சதமாக மாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக மும்பை அணிக்காக 2ஆவது சதம் விளாசியுள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் 6ஆவது சதத்தையும் பதிவு செய்துள்ளார்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழாக்கமல் இருந்தார். திலக் வர்மா 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 4 வெற்றிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!