Nagai MP Selvaraj : யார் இந்த நாகை எம்.பி செல்வராஜ்.? அரசியல் களத்தில் வந்தது எப்படி.? இறுதி சடங்கு எப்போது.?

Published : May 13, 2024, 07:51 AM IST

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். எம் செல்வராசு எம் பி (67) இன்று  அதிகாலை  சென்னை மருத்துவ மனையில் காலமானார். இவர் மக்களவைக்கு 4 முறை தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

PREV
16
Nagai MP Selvaraj : யார் இந்த நாகை எம்.பி செல்வராஜ்.? அரசியல் களத்தில் வந்தது எப்படி.? இறுதி சடங்கு எப்போது.?

விவசாயின் மகன் செல்வராஜ்

மக்களவைக்கு தமிழகத்தில் இருந்து 4 முறை வெற்றி பெற்று சென்றவர் தான் நாகப்பட்டினர் எம்பி, எம்.செல்வராஜ், இவர் திருவாரூர் மாவட்டம். நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஏழை விவசாயி முனியன் - குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக 1957 மார்ச் 16 ஆம் தேதி பிறந்தவர்.

நீடாமங்கலம் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் வலுவான மக்கள் தளமாகும். விவசாயிகள் இயக்கத்தில் முனியன் - குஞ்சம்மாள் குடும்பமும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் தோழர் எம். செல்வராசு சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.
 

26

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வராஜ்

பள்ளிக் கல்வியை முடித்து திருவாரூர் திரு வி க அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். மாணவர் பெருமன்றம், இளைஞர பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட எம். செல்வராசு அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் இடைக்குழு உறுப்பினர், துணைச் செயலாளர், செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர் என பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர்.
 

36

4 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திருவாரூர், நாகபட்டினம் என பிரித்து அமைக்கப்பட்ட போது திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர், நாகபட்டினம் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டவர். 1989 ஆம் ஆண்டு நாகபட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்றவர். தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகபட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்..
 

46

போராட்ட களத்தில் செல்வராஜ்

நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர். 1989 ஜூன் 12 காவிரி நதிநீர் பிரச்சினை மீது நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை முதல் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா வரை 110 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியதில் முன்னணி பங்கு வகித்தவர். 

எம் செல்வராசுவுக்கு ருத்திராபதி, என்ற முத்த சகோதரர், நாகம்மாள், சாரதா மணி என இரண்டு மூத்த சகோதரிகள், வீரமணி, வெற்றிச் செல்வி என இளைய சகோதரரும், சகோதரியும் உள்ளனர். இதில் முத்த சகோதரி நாகம்மாள் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். தோழர் எம். செல்வராசு சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்றவர். இவரது சகோதரி சாரதாமணி சிறுநீரகம் அளித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
 

56

உடல்நிலை பாதிப்பால் காலமானார்.

செல்வராசு - கமலவதனம் தம்பதியருக்கு செல்வப்பிரியா, தர்ஷினி என இரு மகள்கள் உள்ளனர். இதில் செல்வப் பிரியாவுக்கு கடந்த ஆண்டு (2023) முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தோழர் எம். செல்வராசு எம் பி உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, அதிகாலை 02.40 மணிக்கு காலமானார்.

66
cpi flag

;நாளை உடல் அடக்கம்

நாளை (14.05.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும். மறைந்த செல்வராஜூக்கு  மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

click me!

Recommended Stories