Courtallam Season:குற்றால அருவியில் கொட்டப்போகுது தண்ணீர்.?முன் கூட்டியே தொடங்குது சீசன்-இதோ லேட்டஸ்ட் அப்பேட்

First Published | May 12, 2024, 9:59 AM IST

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துகொள்ளும் வகையில் குற்றாலத்தில் நாளை முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வரும் வாரம் தண்ணீர் கொட்டோ கொட்டுனு கொட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெளுத்தும் வாங்கும் வெயில்

தமிழகத்தில் கோடை வெயிலில் தாக்கம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே தொடங்கி விட்டது. காலை 7 மணிக்கு சூரியன் சுல்லென அடிக்க ஆரம்பிப்பதால் வீடுகளில் இருந்து வெளியே செல்லவே மக்கள் அச்சப்படும் நிலையானது நீடித்து வருகிறது. இதற்கிடையே ஒரு சில இடங்களில் வெப்ப அலையும் உச்சகட்டத்தை எட்டியதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து உள்ளனர்.

கோடை வெயிலில் தக்காளி, வெங்காயம், கேரட் விலை உயர்ந்ததா.? காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் என்ன.?

வெப்ப அலை- அலறும் மக்கள்

ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, வேலூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 105 டிகிரிகளுக்கு மேல் வெயிலானது வாட்டி வதைத்தது. மத்திய அரசும் தமிழக அரசும் அடுத்தடுத்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் முற்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

இருந்த போதும் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி ஏற்காடு என குளுகுளு இடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
 

Tap to resize

வறண்டு காணப்படும் அருவிகள்

ஊட்டி கொடைக்கானல் என்ற மலை பிரதேசங்களுக்கு சென்ற மக்களுக்கு மக்கள் மாற்று இடமான குற்றாலத்தில் இதமான சாரலோடு அருவியில்  இந்த கோடை வெயில் வெப்பத்தை தவிர்க்க குளிக்க விருப்பப்பட்டு தென்காசி மாவட்டத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். ஆனால் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்ததால் தென்காமி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அருவிகளில் வறண்ட பாறையை கண்ணுக்கு காட்சியளித்தது.
 

Courtallam

முன் கூட்டியே சீசன்

இதனால் இயற்க்கையோடு இணைந்து இதமான குற்றால சாரலோடு அருவியில் குளித்து கும்மாளமிடலாம் என்ற எதிர்பார்ப்போடு வந்த  பணிகள் ஏமாற்றத்தோடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் தான் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஒரு புதிய செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழையானது பெய்து வருகிறது. குற்றாலத்தில் எப்போதும் ஜூன் மாதம் மத்தியில் குற்றால சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.
 

coutralam

தென்காசியில் நாளை முதல் மழை

தற்போது கோடை மழை காரணமாக குற்றாலம் பகுதிகளில் நாளை முதல் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தென்காசி பகுதி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா கூறுகையில், தென் மேற்கு பருவ மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனால் இன்னும் தென் மேற்கு பருவமழை பெய்யாத காரணத்தால் அருவி வறண்டு காணப்படுகிறது. இந்தநிலையில் தென்காசி பகுதியில் பரவலாக நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.  

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு வாய்ப்பு

குமரி பகுதியில் காற்றழுத்த சுழற்சி உருவாகும் என்பதால் 13ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் மழை பெய்யும் எனவும், இதனால் (நாளை) திங்கட்கிழமை முதல் பரவலாக மழை பெய்யும். இதன் காரணமாக குற்றாலம் பகுதியில் அடுத்த வாரம் முழுவதும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரும் என தெரிவித்துள்ளார்.

kutralam falls

குற்றால அருவியில் தண்ணீர்

மேலும் ஒரு சில அருவிகளில் வெள்ளப்பெருக்க ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், மழையானது மாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்யும் என கூறியுள்ளார். எனவே குற்றால அருவியில் குளிக்க திட்டமிடும் மக்கள் வரும் வாரம் குற்றாலம் செல்லலாம் என கூறியுள்ளார். 

Savukku Shankar : கிளார்க் டூ யூடியூபர்... சவுக்கு சங்கருக்கு இத்தனை கோடி சொத்துக்களா.? வெளியான ஷாக் தகவல்

Latest Videos

click me!