ஆந்திரா, தெலங்கானா உட்பட 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. நடக்கிறது. 96 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
4ஆம் கட்ட தேர்தல்
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இதனையடுத்து 4வது கட்டமாக இன்று ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்குட்பட்ட, 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை மக்கள் தீர்மானிக்கவுள்ளனர்.
இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். கண்னூஜ் தொகுதி அகிலேஷ் யாதவின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் அகிலேஷ் யாதவின் மனைவி இந்த தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அகிலேஷ் யாதவ் களம் இறங்குகிறார்.
பிரிவினையை தூண்டும் பிரதமர் மோடி; தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி உறுதி - துரை வைகோ காட்டம்!
நட்சத்திர வேட்பாளர்கள் யார்.?
பணம் வாங்கிக்கொண்டு பாராளுமன்றத்தில் பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹூவா மொய்த்ரா மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பஹரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
இதே போல மற்றோரு வாரிசு போட்டி தேர்தலாக ஆந்திரா தேர்தல் களம் உள்ளது. இங்கு சட்டமன்ற தேர்தலும் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக, அம்மாநில முதலமைச்சரும், சகோதரருமான ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் செய்து வரும் ஒ.எஸ். சர்மிளா தேர்தலில் களம் இறங்குகிறார். இவர் கடப்பா தொகுதியில் தனது முதல் தேர்தலை சந்திக்கிறார். அவருக்கு எதிராக தங்களது உறவினராக ஓ.எஸ். அவினாஷ் ரெட்டி களம் இறங்கியுள்ளார்.
தெலுங்கானா களத்தில் நிற்கும் ஓவைசி
தெலங்கானாவின் ஹைதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி மீண்டும் போட்டியிடுகிறார். ஒவைசியை எதிர்த்து இந்த முறை பாஜக சார்பாக மாதவி லதா போட்டியிடுகிறார். இவர் ராமநவமி தினத்தில் பள்ளிவாசலை நோக்கி அம்பு ஏய்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.