
ஆந்திரப் பிரதேசம் நந்தியாலாவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் யுவஜன ஸ்ரமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) எம்எல்ஏ ரவி சந்திர கிஷோர் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச தேர்தலை முன்னிட்டு, எம்.எல்.ஏ., இல்லத்தில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்ததால், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எம்எல்ஏ ரெட்டி, சனிக்கிழமையன்று கூடிய கூட்டத்திற்கு முன் அனுமதியின்றி அல்லு அர்ஜுனை அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் விதிகளை மீறியதற்காக அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆந்திராவில் நாளை திங்கள்கிழமை (மே 13) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு அமலில் உள்ள 144 உத்தரவை மீறியதற்காக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள நந்தியாலா தொகுதியில் தேர்தலை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட நந்தியாலா கிராமத்தைச் சேர்ந்த துணை தாசில்தார் ராமச்சந்திர ராவ் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். முன்னதாக சனிக்கிழமையன்று, ரெட்டியை அவரது இல்லத்தில் பெரும் ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் சந்தித்த பிறகு, அல்லு அர்ஜுன் தனது நண்பருக்கு உதவ நந்தியாலாவுக்குச் சென்றதாகவும், எந்த அரசியல் கட்சியையும் தான் ஆதரிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"நான் என் சொந்த விஷயமாக இங்கு வந்தேன். எனது நண்பர்கள் எந்த துறையில் இருந்தாலும், அவர்களுக்கு எனது உதவி தேவைப்பட்டால், நான் அவர்களுக்கு உதவுவேன். இது நான் ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்கிறேன் என்ற அர்த்தம் இல்லை" என்று நடிகர் அல்லு அர்ஜுன் நிருபர் ஒருவரிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு: மேலும் ஒரு இந்தியரை கைது செய்த கனடா!