விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கடலில் குதிக்க போவதாக தகராறு செய்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்
துபாயில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு கடந்த 8ஆம் தேதி ஏர் இந்தியா எக்பிரஸ் விமானம் புறப்பட்டுள்ளது. மறுநாளை காலை 7.30 மணிக்கு மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியுள்ளது. முன்னதாக, அந்த விமானத்தில் பயணித்த முகமது என்ற நபர் அதிகாலையில் விமான ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
கிருஷ்ண என்ற பட்டியலிடப்படாத பயணி பற்றி கேள்வி எழுப்பிய முகமது, சம்பந்தமில்லாத கேள்விகளை எழுப்பியதுடன், சர்வீஸ் பட்டனை மீண்டும் மீண்டும் அழுத்தி விமான ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். மேலும், தனது லைப்-ஜாக்கெட்டை கழற்றி கொடுத்து, தரையிறங்கியதும் அதனை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் விமானம் அரபிக் கடலுக்கு மேலே பறந்த போது, கீழே குதிக்க போவதாக நடுவானில் விமான ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரது செயல் மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு: மேலும் ஒரு இந்தியரை கைது செய்த கனடா!
இதையடுத்து, விமானம் தரையிறங்கியதும், விமான பயணத்தின்போது ஊழியர்களுக்கு இடையூறு விளைவித்ததாக ஏர் இந்தியா எக்பிரஸ் விமானத்தின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்தாஸ் என்பவர் அளித்த புகாரின் பேரில் பஜ்பே காவல் நிலையத்தில் முகமது மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.