வயசாக வயசாக மெருகேறிக்கிட்டே இருக்க... நயனை ஒயினோடு ஒப்பிட்டு Women's Day வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்

First Published Mar 8, 2024, 6:48 PM IST

மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தன்னுடைய காதல் மனைவி நயன்தாராவை ஒயினோடு ஒப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan, nayanthara

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த நானும் ரெளடி தான் படத்தில் முதன்முறையாக இணைந்து பணியாற்றினர். பார்த்த உடனே விக்கி மீது நயன்தாராவுக்கு ஒரு கிரஷ் ஏற்பட, இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே காதலித்து வந்துள்ளனர். அப்பட ஷூட்டிங் சமயத்தில் அதில் நடித்த சீனியர் நடிகையான ராதிகாவுக்கே இவர்கள் இருவரும் காதலித்தது தெரியாதாம். அந்த அளவுக்கு ரகசியமாக காதலித்து வந்துள்ளனர்.

Vignesh Shivan Wife Nayanthara

பின்னர் படிப்படியாக இவர்களது காதல் காத்துவாக்குல வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து இருவரும் ஜோடியாக பட விழாக்களில் கலந்துகொள்ளத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கினர். அப்போது அவர்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டது யாருக்கும் தெரியாமல் இருந்ததால், அவர்கள் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியிட்டு வந்தனர்.

இதையும் படியுங்கள்... தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது இவ்ளோ ஈஸியா? உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்து விஜய் கொடுத்த விளக்கம்

Vignesh shivan clicks of Nayanthara

சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த 2022-ம் ஆண்டு பிரபலங்கள் புடைசூழ திருமணம் செய்துகொண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். இதையடுத்து நான்கே மாதத்தில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. வாடகைத் தாய் முறையில் அந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டது இந்த ஜோடி. 

Vignesh shivan Womens Day Wish

அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என அழகான பெயரிட்டுள்ள விக்கி - நயன் ஜோடி தற்போது அவர்களுடன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு உள்ளனர். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தற்போது சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு சென்ற கையோடு தன்னுடைய மனைவிக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். 

Vignesh shivan Compare Nayanthara with Wine

அதன்படி ஒயின் கிளாஸையும் நயன்தாராவையும் ஒன்றாக போட்டோ எடுத்து பதிவிட்டு, ‘வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் ரெண்டே விஷயம் என நயனை ஒயினோடு ஒப்பிட்டு தன்னுடைய மகளிர் தின வாழ்த்துக்களை வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கிறார் விக்கி. அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... இனி இசக்கி மேல கைவச்ச இதுதான் நடக்கும்... முத்துப்பாண்டிக்கு வார்னிங் கொடுத்த மாமனார் - அண்ணா சீரியல் டுவிஸ்ட்

click me!