Vellore : வேலூர் மக்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்.. மே 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - ஏன் தெரியுமா?

By Ansgar RFirst Published May 9, 2024, 6:14 PM IST
Highlights

Vellore District : வரும் மே மாதம் 14ம் தேதி செவ்வாய் கிழமை வேலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்ட நிர்வாகம் தற்பொழுது அளித்துள்ள தகவல்படி வருகின்ற மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வேலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கொங்கையம்மன் சிரசு திருவிழாவை ஒட்டி இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில், வருடம் தோறும் வைகாசி மாதம் முதல் தேதி ஆசிய அளவில் பிரசித்தி பெற்ற சிரசு திருவிழா நடைபெறும். இந்நிலையில் அந்த சிரசு ஊர்வலம் இந்த ஆண்டு மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

நாளை அட்சய திருதியை.. துளசியின் 'இந்த' பரிகாரங்களை செய்யுங்கள்.. பணம் கொட்டும்!

ஆகவே பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் இதில் கலந்துகொள்வதற்கு வசதியாக அன்றைய தினம் வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அன்றைய வேலை நாளுக்கு பதிலாக ஜூன் மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது 

அதே போல ஜூன் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமைச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்திருக்கிறார். பெரிய அளவில் மக்கள் இந்த விழாவிற்கு கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 

கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!

click me!