இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு!

By Manikanda PrabuFirst Published May 9, 2024, 5:52 PM IST
Highlights

இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

ஆனால், அவரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தவறியதாகவும், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை மீண்டும் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சேவும் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இதையடுத்து, புதிய அதிபர் தேர்வுக்கான நடைமுறையை அந்நாட்டு நாடாளுமன்றம் தொடங்கியது. அதன்படி, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். முன்னதாக ராஜினாமா செய்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு முடிவடைவதால், அதுவரை புதிய அதிபர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இந்த நிலையில்,  இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை அதிபர் தேர்தல் 2024ஆனது செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதர நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததற்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

6.6 பில்லியன் ஏக்கர் நிலம்.. உலகிலேயே அதிக சொத்துக்களை வைத்திருக்கும் ஒரே குடும்பம்.. யார் தெரியுமா?

இலங்கையில் ஒட்டுமொத்தமாக 9 மாகாணங்களும்,  25 மாவட்டங்களும் உள்ளன.  ஆனால், தேர்தலுக்காக இவை,  22 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும்.  இப்படிப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 160 தேர்தல் தொகுதிகள் உள்ளன. அதோடு ஒரு மாகாணத்துக்கு கூடுதலாக 4 உறுப்பினர் என்கிற வகையில் மொத்தமுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு 36 பேர் என ஒட்டுமொத்தமாக 196 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன.  அதில் 196 பேர் தேர்தல் மூலமாகவும்,  29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்நாட்டில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணிக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கடந்த 1978ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் வாக்களிப்பின்றி இலங்கை நாடாளுமன்றம் நேரடியாக அதிபரை தேர்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!