எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை மறைத்து 50 பேருடன் உடலுறவு கொண்டவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

By SG Balan  |  First Published May 9, 2024, 4:08 PM IST

ஒரு துப்பறிவு அதிகாரி ஒரு 15 வயது சிறுவன் போல அலெக்சாண்டர் லூயியுடன் ஆன்னைலின் பேசியுள்ளார். அப்போது லூயி தொடர்ந்து எய்ட்ஸை பரப்ப முயற்சி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.


அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பலருடன் பாலியல் தொடர்பு கொண்டு எச்ஐவி எய்ட்ஸ் நோயை வேண்டுமென்றே பரப்ப முயற்சி செய்தற்காக 30 ஆண்டுகள் சிறை பெற்றுள்ளார்.

34 வயதான இளைஞர் அலெக்சாண்டர் லூயி மீதான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2023 இல் தொடங்கியது. அடா கவுண்டியைச் சேர்ந்த ஒரு துப்பறிவு அதிகாரி ஒரு 15 வயது சிறுவன் போல அலெக்சாண்டர் லூயியுடன் ஆன்னைலின் பேசியுள்ளார். அப்போது லூயி தொடர்ந்து எய்ட்ஸை பரப்ப முயற்சி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

லூயியின் ஆன்லைனில் தன்னுடன் பேசிய சிறுவனை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அடா கவுண்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையைத் தொடர்ந்தபோது, எச்.ஐ.வி எய்ட்ஸ் பாதிப்பு உள்ள லூயி, மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மற்றவர்களுக்கு எச்.ஐ.வி. பரவும் வகையில் ஆண்கள் மற்றும் டீன் ஏஜ் பையன்களுடன் வேண்டுமென்றே உடலுறவு வைத்திருக்கிறார் என்றும் கண்டுபிடித்தனர்.

வாட்ஸ்அப் தொல்லையா மாறிருச்சா! இதை செஞ்சு பாருங்க... ரிலாக்ஸா இருக்கலாம்...

பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதைப் பற்றிச் சொல்லாமல் மறைத்துள்ளார். 16 வயது சிறுவன் முதல் 30 முதல் 50 வெவ்வேறு ஆண்கள் மற்றும் சிறுவர்களுடன் உடலுறவு கொண்டதாக அவரே போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, லூயியின் தொடர்ச்சியான மற்றும் மோசமான குற்றங்கள் சமூகத்தில் பலரை எதிர்மறையாக பாதித்துள்ளன என்று அடா கவுண்டி வழக்கறிஞர் ஜான் பென்னெட்ஸ் கூறினார்.  இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு அடா கவுண்டி ஷெரிப்பின் டிடெக்டிவ் மற்றும் சோதனைக் குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாகும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணைக்குப் பின் அடா கவுண்டி மாவட்ட நீதிபதி டெரிக் ஓ'நீல் அலெக்சாண்டர் லூயிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அதிகரிக்கும் கிரெடிட் கார்டு ரிவார்டு மோசடி... சைபர் கிரிமினல்களிடம் சிக்காமல் இருப்பது எப்படி?

click me!