6.6 பில்லியன் ஏக்கர் நிலம்.. உலகிலேயே அதிக சொத்துக்களை வைத்திருக்கும் ஒரே குடும்பம்.. யார் தெரியுமா?

By Ramya sFirst Published May 9, 2024, 9:42 AM IST
Highlights

உலகின் அதிக நிலம் வைத்திருக்கும் நபர் யார் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

காடுகளில் அலைந்து திரிந்த மனிதன் ஆற்றங்கரையில் தங்கி விவசாயம் செய்து வாழ தொடங்கியதில் இருந்து நிலத்தின் மீது உரிமை கொள்ள ஆரம்பித்துவிட்டான். தான் இறப்பதற்குள் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது. ஆனால் உலகின் அதிக நிலம் வைத்திருக்கும் நபர் யார் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

உலகில் அதிக நிலம் கொண்டவர்கள் மிகவும் பிரபலமானவர்கள் தான். சொல்லப்போனால் இவர்களிடம் ஒரு காலத்தில் பாதி உலகமே இருந்தது என்று சொல்ல வேண்டும். இன்று பாதி உலகத்தின் ஆட்சி அதிகாரம் இல்லை என்றாலும் நிலங்கள் வாங்கி அதிகாரங்களை கொண்டுள்ளனர். அவர்கள் வேறு யாருமில்லை.

எப்போதுமே உலகின் பணக்கார இந்திய தொழிலதிபர் இவர் தான்.. அம்பானி, அதானிலாம் கிட்ட கூட நெருங்க முடியாது..

இங்கிலாந்தின் அரச குடும்பம் தான் உலகிலேயே அதிகமான நிலங்களை சொத்து வைத்திருப்பவர்கள் ஆவர். கிராமப்புற விவசாய நிலங்கள், காடுகள், நகர்ப்புறங்களில் நிலம், வீடுகள் மற்றும் ஆடம்பரமான சந்தை வளாகங்கள், கடற்கரைகள் கூட அவர்களுக்கு சொந்தமாக உள்ளதாம். உலகம் முழுவதும் உள்ள நிலங்களையும், சொத்துக்களையும் கண்காணிக்க ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. 

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆவார். அவரின் தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி இறந்த பின்னர் மன்னராக முடிசூட்டப்பட்ட இவர் தான் உலகின் அதிக நிலங்களுக்கு சொந்தக்காரர். அவர் இந்த சொத்தின் உரிமையாளராக இருந்தாலும், அவரின் தனிப்பட்ட உரிமையாளர் அல்ல. 

அவர் மன்னராக இருக்கும் வரை இந்த சொத்து அனைத்தும் அவரின் சொத்தாக கருதப்படும். இன்சைடர் உள்ளிட்ட பல வர்த்தக வலைதளங்களின் படி இளவரசர் சார்லஸ் உலகம் முழுவதும் 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கிறார். இந்த நிலங்கள் கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் சொத்துக்கள் உள்ளன. உலகின் மொத்த செல்வத்தில் 16.6 சதவீதம் சொத்து பிரிட்டிஷ் மன்னரிடம் உள்ளது. 

The Crown Estate என்ற அமைப்பு இந்த முழு சொத்தையும் கவனித்து பராமரிக்கிறது. பிரிட்டிஷ் அரச குடும்பம் 2,50,000 ஏக்கர் நிலத்தை நேரடியாக கையாள்கிறது. மற்றவை 115000 ஏக்கர் நிலம் விவசாயம் மற்றும் காடுகளாக உள்ளன. பல்வேறு ஷாப்பிங் செண்டர்களை நடத்தி வருகிறது. மணல், சரளை, சுண்ணாம்பு, கிரானைட், செங்கல், களிமண், நிலக்கரி போன்ற வர்த்தகங்களையும் செய்து வருகிறது.

துபாயில் ரூ.650 கோடியில் ஆடம்பர வீடு.. முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளுக்கு வழங்கிய ஆடம்பர பரிசுகள்..

கிரவுன் எஸ்டேட் என்பது ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள நிறுவனமாகும். iது மன்னருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் உடைமைகளை வைத்திருக்கிறது. இது இங்கிலாந்து அரச குடும்பத்தின் சொத்துக்களை கண்காணித்து வருகிறது. 
இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு பிறகு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா இருக்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் 8,30,000 சதுர மைல்களை ஆட்சி செய்கிறார். எண்ணெய் வியாபாரம் செய்து வரும் சவுதி மன்னரின் குடும்பம் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக உள்ளது. 

click me!