Flash Back: ஒரு மணிநேரம் யோசிச்சும் ஒன்னும் வரல! கலைஞர் சொன்ன வரிக்கு... வாலிக்கு முத்தம் கொடுத்த MGR!

First Published May 9, 2024, 6:05 PM IST

நிகழ்ச்சி ஒன்றில் கலைஞர் கருணாநிதி MGR படத்திற்கு பாடல் வரி எழுதிய அற்புதமான சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல் இதோ.
 

இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், MGR - ஜெயலலிதா நடிப்பில் 1970-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என் தங்கம்'. இந்த படத்தை மேகலா பிச்சர்ஸ் சார்பில் முரசொலி மாறன் தயாரித்திருந்தார். 
 

உணர்வு பூர்வமான அண்ணன் - தங்கை கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 3 தமிழக அரசின் விருதை பெற்றது. மேலும் மு. கருணாநிதியும், முரசொலி மாறனும் கடன் சிக்கலில் ஆழ்ந்து இருப்பதை அறிந்த நடிகர் மஃற, 'எங்கள் தங்கம்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார். அண்ணாதுரை, முரசொலி போன்றவர்களும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருப்பார்கள்.

Vijay Deverakonda Net Worth: 35 வயதில் அசுர வளர்ச்சி.. விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
 

இந்த சிறப்பு வாய்ந்த படத்தில் இடம்பெற்ற பாடல் பற்றி தான், மறைந்த கவிஞர் வாலி... ஒருமுறை பேசியுள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பார்த்து பாடும் காதல் பாட்டு ஒன்றை நான் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தின் இசையமைப்பாளர் விஸ்வநாதன், நான் அளவோடு ரசிப்பவன் என்கிற வார்த்தையை சொல்லி அடுத்த வரியை என்னிடம் எழுதச் சொன்னார். நான் வெற்றிலை - பாக்கு போட்டு அடுத்த வரியை யோசித்தபோது, ஒன்னும் வரவில்லை.
 

vaali

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த கலைஞர்... "என்னையா வாலி, பாட்டு எழுதுறியா என்று கேட்டார்" . அதற்கு வாலி.. "அளவோடு ரசிப்பவன் என்கிற வரியை கூறி, அடுத்த வரி எனக்கு தோன்றவில்லை என கூறியுள்ளார்". பின்னர் விசு ட்யூனை வாசி என கூறி, எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று அடுத்த வரியை நொடி பொழுதில் கூறினாராம். எனவே இந்த பாட்டு, எம்ஜிஆருக்கு கலைஞர் எழுதிய பாட்டு என மெய் சிலிர்த்து போன வாலி. இந்த வரியை கேட்டதும் அசந்து போய்விட்டேன் என தெரிவித்துள்ளார்.

Sai Pallavi Birthday: சாய் பல்லவி 'தண்டேல்' ஷூட்டிங்கில் செய்த அமர்க்களம்! படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!
 

Karunanidhi MGR

காரணம், ஒரு மணி நேரம் வெற்றிலை பாக்கு போட்டு யோசித்து என் கன்னம் எல்லாம் விலகி விட்டது. இவர் வந்ததும் எழுதிவிட்டார் என்று. பின்னர் பத்து நாள் கழித்து எம்ஜிஆரை ஸ்டூடியோவில் வாலி பார்த்தபோது, MGR தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், நான் என்ன அண்ணா... ஏதாவது விசேஷமா என்று கேட்டேன், அதற்க்கு MGR  'அளவின்றி கொடுப்பவன் நான்' என்று... என்னைப்பற்றி எழுதி விட்டாயே என்று கூறி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்க்கு வாலி அந்த முத்தத்தை கலைஞருக்கு போய் கொடுங்கள் என்று சொன்னதாக கூற... இதை கேட்டு கலைஞர் சிரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!