அச்சு அசல் விக்கி, நயனை ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் இருக்கும் மகன்கள்... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

First Published Apr 5, 2024, 10:50 AM IST

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் சிறு வயது புகைப்படங்களை அவர்களது மகன்கள் உயிர் மற்றும் உலக்கின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு போடப்பட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

Vignesh shivan, Nayanthara sons

கேரளாவை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா, தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் பேமஸ் ஆனார். இதனால் கோலிவுட்டிலேயே செட்டில் ஆன அவர் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் நடிகையாக உயர்ந்தார். தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு மற்றும் பிரபுதேவா உடன் காதல் சர்ச்சையில் சிக்கிய அவர் பின்னர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Vignesh shivan, Nayanthara kids

நானும் ரவுடி தான் படத்தின் படத்தில் பணியாற்றியபோது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் ரகசியமாக சில ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள், ஒருகட்டத்தில் தங்களது காதலை ஓப்பனாக அறிவித்த கையோடு, லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். 7 வருட காதலுக்கு பின் இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

இதையும் படியுங்கள்... Vanitha : இந்த வயசுல இதெல்லாம் தேவையா! மகளுக்கு போட்டியாக கவர்ச்சியில் குதித்த வனிதா - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Nayanthara and Ulag

திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர் விக்கி - நயன் ஜோடி. அதன் பின்னர் தான் அவர்கள் வாடகைத் தாய் மூலம் அந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. அவர்கள் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் சிவன், உலக் தெய்விக் சிவன் என பெயரிட்டுள்ளனர். தற்போது விக்கி - நயன் ஜோடியின் குழந்தைகளுக்கு ஒன்றரை வயது ஆகிறது.

Vignesh shivan and Uyir Photo

இந்த நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோரின் சிறுவயது புகைப்படங்களையும் அவர்களின் மகன்களின் புகைப்படங்களையும் ஒப்பிட்டு போடப்பட்டுள்ள புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகிறது. இதில் உயிர் அச்சு அசல் விக்னேஷ் சிவன் போலவும், உலக் அப்படியே நயன்தாரா போலவும் இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். விக்னேஷ் சிவனும் இந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... வைர கல் பதித்த வாட்ச்.. கமல்ஹாசன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை.. இந்திரஜாவுக்கு கொடுத்த கிஃப்ட் என்ன?

click me!