திண்டுக்கல்லில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்திற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் ஸ்ரீ சக்தி சந்தான கணேசர் திருக்கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வருட அபிஷேக விழாவை முன்னிட்டு ஸ்ரீ சக்தி சந்தான கணேசன் மற்றும் பரிவார தெய்வங்களாக ஸ்ரீ பரமேஸ்வரி சமேத பரமேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத் பவர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் காலபைரவர் ஆகிய தெய்வங்கள் கொண்ட கோவில் அமைந்துள்ளது.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாஷாபுரீஸ்வரர் ஆலய தேர் திருவிழா; சிவதாண்டவம் ஆடி பக்தர்கள் உற்சாகம்
இந்த கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா நடந்தது. இதில் இஸ்லாமிய பெருமக்கள், மணமகள் வீட்டாராக பங்கேற்று சீர்வரிசைகளை அளித்தனர். பூமாலை, வளையல், பட்டு சேலை, பழங்கள் உட்பட 21 வகை சீர் தட்டு கொண்ட சீர்வரிசையை அளித்தனர்.
கோடை மழைக்கே தாக்குபிடிக்காத கலைஞர் நூற்றாண்டு நூலகம்; 2 பிரிவுகள் மூடப்பட்டதால் வாசகர்கள் ஏமாற்றம்
விழா ஏற்பாடுகளை J.C.அறக்கட்டளை தலைவர் தனபால் தலைமையில் ஊர் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ரவுண்ட் ரோடு புதூர் ஜூம்மா மஜித் பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில், செயலாளர் முகமது ரஃபீக், பொருளாளர் முகமது ஹவுஸ், 18 வதுவார்டு மாநகராட்சி கவுன்சிலர் முகமது சித்திக், உட்பட பலர் பங்கேற்றனர். சிவாச்சாரியார்களால் மங்கள நான் பூட்டப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்களது தாலி கயிறுகளை மாற்றிக் கொண்டனர். அதனை தொடர்ந்து திருக்கல்யாண விருந்தாக அன்னதானம் வழங்கப்பட்டது.