வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து காலை கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழாவான 21-ம் தேதி மாலை அருள்மிகு முத்துக்குமாராசாமி - வள்ளி, தெயாவானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
undefined
அதனைத் தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. 7-ம் நாளான 22ம் தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமார சுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மதுரையில் சாலையில் கிடந்த செயின், மோதிரம்; டீ கடைக்காரரின் செயலை கண்டு வியந்துபோன அதிகாரிகள்
இதையடுத்து காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. வருகின்ற 25 ம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சியுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் லட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.