Sexual Abuse: அரசு மருத்துவர் செய்த இழிவான செயல்; விபரீத முடிவெடுத்த செவிலியர் கவலைக்கிடம் - போலீஸ் அதிரடி

By Velmurugan s  |  First Published May 13, 2024, 2:33 PM IST

வத்தலகுண்டில் அரசு மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததால் தற்கொலைக்கு முயன்ற செவிலியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் (வயது 28). இவர் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றும் சரண்யா (31) என்ற செவிலியருக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. 

சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்த இருசக்கர வாகனம்; அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து - மதுரையில் பரபரப்பு

Latest Videos

மேலும் தனது விருப்பத்துக்கு இணங்கா விட்டால் பணியில் இருந்து விலகி விடுவதாகவும் சீனிவாசன் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா தற்கொலைக்கு முயன்று உள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் நைல் காய்ச்சல்; தமிழகம் வரும் 13 வழித்தடங்களிலும் கண்காணிப்பு பணி தீவிரம்

இதனையடுத்து சரண்யா அளித்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட வத்தலக்குண்டு போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மருத்துவர் சீனிவாசனை கைது செய்தனர். செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!