புதிய அவதாரம் எடுக்கும் ஐபோன் SE! ஆனா இந்த முறை விலை கொஞ்சம் அதிகமா இருக்குமாம்!

Published : May 21, 2024, 01:44 PM IST

ஆப்பிளின் தனது ஐபோன் SE பட்ஜெட் மொபைலின் புதிய எடிஷனை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. வடிவமைப்பில் பெரிய மாற்றத்துடன் 2022ஆம் ஆண்டு வெளியான iPhone SE மொபைலை விட சற்று விலை அதிகமாக இருக்குமாம்! 

PREV
17
புதிய அவதாரம் எடுக்கும் ஐபோன் SE! ஆனா இந்த முறை விலை கொஞ்சம் அதிகமா இருக்குமாம்!

ஆப்பிளின் நான்காவது தலைமுறை ஐபோன் SE வெளிவர இருப்பதாகக் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு வெளியான iPhone SE மொபைலை அடுத்து இந்த புதிய வெர்ஷன் வெளிவரவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

27

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone SE பட்ஜெட் ஐபோன் வெளியீட்டுத் தேதி இன்னும் தெரியவரவில்லை. ஆனால் புதிய வெர்ஷனில் ஐபோன் SE வடிவமைப்பில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. தற்போதுள்ள மாடலை விட ஐபோன் SE 4 சற்று விஙை அதிகமாக இருக்கும் என்று டெக் வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.

37

ஐபோன் எஸ்இ 4 ஐபோன் 14 போன்ற வடிவமைப்புடன் ஃபேஸ் ஐடி வசதி கொண்டதாகவும் நீண்ட நேரம் தாங்கும் பேட்டரியைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

47

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒரு டெக் ஆர்வலர் (@Revegnus1), ஆப்பிள் ஐபோன் எஸ்.இ. 4 (iPhone SE 4) விலை 500 டாலர் (தோராயமாக ரூ. 41,000) ஆக இருக்கும் என்று கூறுகிறார். 2022ஆம் ஆண்டு வெளியான iPhone SE மொபைலின் விலை 429 டாலர் (தோராயமாக ரூ. 35,000) ஆரம்ப விலையில் வெளியான நிலையில், புதிய எடிஷனின் விலை சற்று அதிகரிக்க உள்ளது.

57

இதிலிருந்து iPhone SE 4 அறிமுக விலை 10 சதவிகிதம் உயரலாம் என்று தெரிகிறது. விலை அதிகரித்தாலும், 499 டாலருக்கு மேல் அதிகமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

67

ஆப்பிள் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் 48 மெகாபிக்சல் முதன்மை ரியர் கேமராவுடன் iPhone SE 4 மொபைலை அறிமுகப்படுத்த உள்ளது எனத் தகவல் பரவி வருகிறது. இது 6.1-இன்ச் LTPS OLED டிஸ்பிளே, இன்-ஹவுஸ் 5G மோடம் சிப், USB Type-C சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

77

ஐபோன் SE முதன்முதலில் 2016 இல் வெளியிடப்பட்டது. ஐபோன் SE மூன்றாவது எடிஷன் 2022 இல் இந்தியாவில் ரூ.43,900 ஆரம்ப விலையுடன் அறிமுகமானது.

click me!

Recommended Stories