iPhone 16 Leaks: ஐபோன் 16 ரகசியம் லீக்! ஆப்பிள் போட்ட பிளானை போட்டு உடைத்த நெட்டிசன்கள்!

First Published | May 20, 2024, 4:06 PM IST

iPhone 16 Leaks: கேட்ஜெட் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஆப்பிள் ஐபோன் 16 அறிமுகத்திற்கு முன்கூட்டியே முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

iPhone 16 in new colours

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து புதிதாக வரவிருக்கும் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மொபைல்கள் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்து வைரலாகி இருக்கிறது.

iPhone 16 leaks news

சீனாவைச் சேர்ந்த டெக் ஆர்வலர் Ming-Chi Kuo ட்விட்டர் பக்கத்தில் லீக் செய்துள்ள சமீபத்திய தகவலின்படி, வரவிருக்கும் ஐபோன் (iPhone 16) சீரிஸ் கருப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். அதே நேரத்தில் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) சீரிஸ் கருப்பு, வெள்ளை, சாம்பல் மற்றும் ரோஸ் கலர்களில் கிடைக்கும்.

Tap to resize

iPhone 16 launch date

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 16 series update

iPhone 16 மற்றும் iPhone 16 Plus ஆகியவை கடந்த ஆண்டைப் போலவே, கருப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். அதாவது iPhone 15 சீரிஸ் போலவே இருக்கும்.

Apple iPhone 16 mobiles

iPhone 16 மொபைலின் தோற்றத்தைப் பொறுத்தவரை, வெர்ட்டிகிள் டூயல் கேமரா அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

iPhone 16 smartphones

ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸுக்கு கலர் ஆப்ஷன்கள் இருக்கும் என்றும் தெரிகிறது. இது கருப்பு, வெள்ளை (அல்லது சில்வர்), சாம்பல் (நேச்சுரல் டைட்டானியம்) மற்றும் ரோஸ் நிறங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முந்தைய தலைமுறை ஐபோன்களை வேறுபடுத்திக் காட்ட, புளூ டைட்டானியத்துக்குப் பதிலாக ரோஸ் வரும் எனத் தெரிகிறது.

iPhone 16 specs

ஆனால் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் அதன் முந்தைய மாடல்களில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும். ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை ஐபோன் 15 ப்ரோ சீரிஸில் உள்ள பிரஷ்டு ஃபினிஷுக்குப் பதிலாக, பளபளப்பான ஃபினிஷ் கொண்டிருக்கும். டைட்டானியம் பிரேமைக் கொண்டிருக்கும்.

iPhone 16 price in India

ஐபோன் 15 ப்ரோ சீரிஸில் இருந்து ஆப்பிள் துருப்பிடிக்காத ஸ்டீலுக்குப் பதிலாக டைட்டானியத்தை பயன்படுத்த ஆரம்பித்தது. இது ப்ரோ மாடல் மொபைல்களின் எடையைச் சிறிதளவு குறைக்க உதவியது. எனவே ஐபோன் 16 ப்ரோ சீரிஸும் அதே போல இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Latest Videos

click me!