வெறும் 8,499 ரூபாய்க்கு 5G ஸ்மார்ட்போன்! நோக்கியா G42 மொபைலுக்கு பக்கா டீல்!

First Published | May 12, 2024, 2:55 PM IST

நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஸ்மார்ட்போன் அமேசானில் சிறப்புத் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா, 3 நாள் தாக்குப்பிடிக்கும் பேட்டரி என்று பல சிறப்பு அம்சங்களுடன் உள்ளன.

Nokia G42 5G

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட Nokia G42 5G ஸ்மார்ட்போன் அமேசானில் 23% தள்ளுபடியில் ரூ.9,999 விலையில் விற்பனைக்கு உள்ளது. சில வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாக ரூ.1500 தள்ளுபடியு கிடைக்கும். இதன் மூலம் வெறும் ரூ.8,499 ரூபாய்க்கு சூப்பரான 5ஜி மொபைல் உங்களுக்குக் கிடைக்கும்.

Nokia G42 5G offer

நோக்கியாவின் G42 5G மொபைலில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி பிராசஸருடன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. இதை ஆண்ட்ராய்டு 14 க்கு அப்டேட் செய்யலாம். கேமிங் பிரியர்களுக்காக Adreno 619 GPU கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. 6.56-இன்ச் HD+ எல்சிடி டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது.

Tap to resize

Nokia G42 5G price

Nokia G42 5G மொபைலில் 4GB RAM உடன்  2GB விர்ச்சுவல் RAM கிடைக்கும். 128GB மொபைல் ஸ்டோரேஜ் உள்ளது. அதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் நீட்டிக்கவும் முடியும். கைரேகை சென்சார் பக்கவாட்டில் உள்ளது.

Nokia G42 5G specifications

50MP மெயின் கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா கொண்ட இந்த மொபைலில் செல்ஃபி  பிரியர்களுக்காக 8MP கேமராவும் உள்ளது. Night Mode 2.0, AI Portrait, OZO 3D Audio Capture போன்ற பல வசதிகள் உள்ளன.

Nokia G42 5G 6GB RAM

Nokia G42 5G ஸ்மார்ட்போன் 20W சார்ஜிங் திறனுடன் 5000mAh  பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. மொபைலை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாகள் தாக்குப்பிடிக்கும் என நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது.

Latest Videos

click me!