சைலென்ட்டா ரிலீஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A15 ஸ்மார்ட்போன்! அப்படி என்ன சீக்ரெட் இருக்கு?

First Published | Nov 28, 2023, 4:49 PM IST

சாம்சங் கேலக்ஸி ஏ15 (Samsung Galaxy A15) மொபைல் போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது. அமெரிக்காவில் வெளியான இந்த மொபைல் சாம்சங் கேலக்ஸி A சீரிஸில் புதிய மொபைல் ஆகும்.

Samsung Galaxy A15

சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி, 6.5 இன்ச் முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் 6835 பிராசஸர், 50MP பிரதான கேமரா ஆகியவை உள்ளன. ஆண்டிராய்டு 13 இயங்குதளத்தில் செயல்படும் இந்த மொபைலில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy A15

4GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 50MP பிரதான கேமரா மற்றும் 13MP செல்ஃபி கேமரா இருக்கிறது. ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 mAh பேட்டரியையும் பெற்றுள்ளது.

Tap to resize

Samsung Galaxy A15

சாம்சங் கேலக்ஸி ஏ15 மொபைலின் விலை 139 டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் Walmart, Boost Mobile மற்றும் Cricket Wireless மூலம் விற்கப்படுகிறது.

Samsung Galaxy A15

இந்த ஸ்மார்ட்போனுக்கு சாம்சங் நான்கு வருட சாப்ட்வேர் அப்டேட் உத்தரவாதம் கொடுக்கிறது. இந்த மொபைல் ஸ்ட்ரைக் ப்ளூ வண்ணத்தில் வெளியாகியுள்ளது. வேறு வேரியண்ட் கொடுக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்த விவரங்களும் இன்னும் தெரியவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!