Redmi Note 11T
Redmi Note 11T (ரெட்மீ நோட் 11T) ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் FHD+Dot டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது மீடியாடெக் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டது. 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் இருக்கிறது. 50MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 16 MP செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன. 5000mAh பேட்டரியுடன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது.
Itel S23+
Itel S23+ (ஐடெல் S23+) ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேயுடன் கொரில்லா கிளாஸ் இருக்கிறது. 8 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜை உள்ளது. யூனிசாக் T616 ஆக்டா-கோர் பிரசஸர், 50MP AI டபுள் கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 5000mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள்.
Samsung Galaxy M14
Samsung Galaxy M14 (சாம்சங் கேலக்ஸி M14) ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. எக்ஸினோஸ் ஆக்டா கோர் பிராசஸருடன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. 2 MP டெப்த் சென்சார், 2 MP மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றுடன் ட்ரிபிள் கேமரா, 13 MP செல்ஃபி கேமரா இருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh மெகா பேட்டரி இருக்கிறது.
Realme Narzo 60
Realme Narzo 60 (ரியல்மீ நார்ஸோ 60) ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 64MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை கேமராவுடன் வருகிறது. முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. மீடியாடெக் பிராசஸர், 8GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. 5000mAh பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
Techno Pova 5 Pro
Techno Pova 5 Pro (டெக்னோ போவா 5 ப்ரோ) ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் FHD+Dot டிஸ்ப்ளே, 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது. டைமென்சிட்டி 6080 பிராசஸருடன் 50MP டூயல் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. 10W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்துவிடும் அளவு விரைவான சார்ஜிங் திறன் பெற்றது.