OnePlus 12: இனிமேல் ஐபோன் எல்லாம் தூசு... இதுதான் மாஸ்... தட்டித்தூக்கும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன்!

First Published Oct 12, 2023, 1:02 PM IST

கேமரா மற்றும் சார்ஜிங்கில் புதிய வசதிகளைக் கொண்டுவந்திருப்பதன் மூலம் ஆப்பிள் ஐபோனுக்கு கடும் போட்டியாக மாற உள்ளது ஒன்பிளஸ் 12 (OnePlus 12).

OnePlus 12 Update

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வருகின்றன. இந்த மொபைல் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அண்மையில் OnePlus 12 மொபைலில் உள்ள கேமரா பற்றிய தகவல்கள் லீக் செய்யப்பட்டன.

OnePlus 12 News

OnePlus 12 மொபைலில் உள்ள கேமரா அமைப்பு Sony IMX966  உடன் 50MP பிரைமரி கேமரா கொண்டது. 1/1.4 இன்ச் கேமரா சென்சார் மற்றும் f /1.7 அபார்சர் (aperture) கொண்டதாக இருக்கும். 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, f /2.2 அபார்சர் கொண்டாத இருக்கும் என்றும் IMX581 அல்ட்ரா-வைட் லென்ஸைக் இருக்கக்கூனும் என்றும் கூறப்படுகிறது.

OnePlus 12 Camera

ஐபோனில் பெரிஸ்கோபிக் கேமரா சென்சார்கள் பயன்படுத்தப்படும் நிலையில், ஓம்னிவிஷன் OV64B கொண்ட 64 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்சும் OnePlus 12 மொபைலில் இடம்பெறும் சொல்லப்படுகிறது. பயனர்கள் தொலைதூரத்தில் உள்ளவற்றை பெரிதாக்க படம்பிடிக்க OnePlus 12 கேமரா வசதி அளித்துள்ளது. இந்த கேமரா 3x ஆப்டிகல் ஜூம் கொண்டதாக இருக்கும். OnePlus 12 போனில் ஹசெல்ப்லாட் (Hasselblad) டியூனிங் செய்யப்படுகிறது.

OnePlus 12 Launch date in India

OnePlus 12 ஸ்மார்ட்போன் 32MP முன்பக்க செல்ஃபி கேமரா இருக்கும், 6.7' இன்ச் 2K AMOLED LTPO டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிரசஸர் கொண்டதாகவும் 24GB வரை LPDDR5x RAM மற்றும் 1 TB UFS 4.0 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

OnePlus 12 Specs

இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Oxygen OS 14 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். 5,400mAh பேட்டரி 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டதாக இருக்கும். முதல் முறையாக OnePlus நிறுவனம் இந்த மொபைலில்தான் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை அறிமுப்படுத்துகிறது.

OnePlus 12 Price in India

இந்தத் தகவல்கள் அதிகாரபூர்வமானவை இல்லை என்றாலும் பெரிஸ்கோப் லென்ஸ் உடன் மேம்படுத்திய கேமரா அமைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கி இருப்பதால் OnePlus 12 ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்று கேஜெட் பிரியர்கள் கணிக்கின்றனர்.

click me!